This is a famous temple for Lord Shiva which is located in the village of theatre near Tanjore.
Is constructed on 12th century AD
Chitti village is situated south of the cauvery river it is also called thenkudi thittai
The presenting deti is swayambhu keshwar and the goddess name is lakhan nayagi
As the main deti is suyambu Lingam he got the another name called Vasishteswarar.
Tamil meaning for swayambhu is.. no man created this Lingam from any stone instead of this Lingam created by itself from stone, this is called swayambhu.
There are many suyambu Lingam in tamilnadu temples
the name is coming from the word called "Thittu" in Tamil, which is your amount when the whole world was surrounded by water because of a problem Brahma and Vishnu worship the Lord mahadeshwara for protection after wondering mouth four-year safe place they found this only Mount with did not drown in voters where there was here Shiva Lingam over here
they performed Pooja to the Lingam and work shift Lord Shiva who appeared before them and deleted their duties of creation and protection
unique future of this temple is a drop of water falls on the Lingam exactly every 24 minutes once from the roof but for a small hole there is no source of water or anything on the Ramana of the main daity.
its happens only because of two stones Surya guntakal and chandrakanta Kal which are placed at straight points about the women for the reason for the drops of water which falls on the dairy.
This stones are capable to absorb water from sun rays.
தமிழில் விளக்கம்
திட்டை என்பது தஞ்சாவூருக்கு மிக அருகில் உள்ள ஓர் அமைதியான அழகான கிராமம் ஆகும்
இந்த கிராமம் காவேரி நதிக்கரையில் தென்பகுதியில் அமைந்துள்ளது இந்த கிராமம் தென்குடி திட்டை என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது சுயம்பு கேஸ்வரர் என்பது இங்கு அமைந்திருக்கும் ஆலயத்தின் லிங்கத்தின் பெயராகும் அந்த ஆலயத்தின் அம்மனின் பெயர் உலக நாயகி
இந்த ஆலயம் குரு தளமாகவும் புகழ்பெற்று விளங்குகிறது. குரு பகவானின் அருளைப் பெற பலரும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டு செல்கின்றனர் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டுச் சென்றால் குரு பகவானின் முழு நன்மையும் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகமாக இருக்கிறது.
திட்டை என்ற இந்த ஊரின் பெயர் திட்டு என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து வந்ததாகக் கருதப்படுகின்றது. அதாவது திட்டு என்றால் மேடு என்று அர்த்தம் ஒரு காலத்தில் இந்த உலகமே மகா பிரளயத்திற்கு ஆளாகி நீரால் சூழப்பட்ட பொழுது பிரம்மாவும் விஷ்ணுவும் மக்களை காக்க இயலாது வருந்தினர் அப்போது அவர்கள் இந்த உலகத்தில் ஒரே ஒரு இடம் மட்டும் தண்ணீரில் இன்னும் முழுகாமல் இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டனர் அந்த இடம்தான் இப்போது இருக்கும் என்ற கிராமம் ஆகும் அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இருந்ததால் பிரம்மாவும் விஷ்ணுவும் அந்த லிங்கத்தை வழிபட்டு தொழுதனர்.
இந்த ஆலயத்தின் மூலவர் கருவறையின் இன்னொரு அதிசயம் என்னவென்றால்...
இந்த ஆலயத்தின் பிரதான சிவலிங்கத்தின்மீது சரியாக 24 நிமிடத்திற்கு ஒரு முறை அதாவது ஒரு நாளைக்கு ஒரு முறை ஒரு சொட்டு தண்ணீர் கூரையில் இருந்து தானாக விடுகிறது ஆனால் கூரையின் மேற்புறத்தில் எந்த நீர் ஆதாரமும் இல்லாத நிலையில் நீரானது சொட்டிக்கொண்டே இருப்பது மிகவும் அதிசயமாக காணப்படுகிறது நீங்கள் ஒரு 24 நிமிடங்கள் காத்திருந்து பார்த்தால் உங்கள் கண்களால் அந்த லிங்கத்தின் மீது தண்ணீர் சொட்டு விழுவதைக் காண முடியும். இதற்கு காரணம் இந்த கருவறையின் மேல் மேலே அமைந்திருக்கும் விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள சந்திர காந்தக் கல் மற்றும் சூரிய காந்தக் கல் என்ற இரண்டு கற்களின் சக்தியே ஆகும் என்று இந்த கோவில் நிர்வாகத்தினரும் பூசாரிகளும் சொல்கிறார்கள். இந்தக் கற்கள் சந்திரனின் ஒளியில் இருந்தும் சூரியனின் ஒளியில் இருந்தும் நீரை பிரித்து எடுத்து அதை சொட்டு சொட்டாக சரியாக 24 நிமிடங்களுக்கு ஒரு முறை லிங்கத்தின் மீது விழுமாறு படைத்திருக்கிறார்கள் அந்த கால கட்டிடக் கலை நிபுணர்கள்.
இந்த அரிய காட்சி இந்த ஆலயத்தில் மட்டுமே காண முடியும் என்பதால் நீங்கள் இந்த ஆலயத்திற்கு சென்றால் 24 நிமிடங்கள் காத்திருந்து உங்கள் கண் எதிரிலேயே ஒரு சொட்டு நீர் இந்த ஆலயத்தின் சிவலிங்கத்தின் மீது விழுவதை கண்டு விட்டு செல்லுமாறு நான்...
Read moreஅருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், திட்டை-613003 தஞ்சாவூர் மாவட்டம்.
*மூலவர்: வசிஷ்டேஸ்வரர்
*தாயார்: உலகநாயகியம்மை
*தல விருட்சம்: முல்லை, வெண்செண்பகம், செவ்வந்தி
*தீர்த்தம்: சக்கர தீர்த்தம்.
*பாடல் பெற்ற தலம்: தேவாரம் பாடியவர்கள் திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர்.
*பிரளய காலத்தில் இவ்வுலகம் நீரால் சூழப்பட்டபோது திட்டை மற்றும் சீர்காழி ஆகிய சிவதலங்கள் பாதிக்கப்படாமல் திட்டாகத் தோன்றியபடியால் சீர்காழியை வட திட்டை எனவும் வசிஷ்டேஸ்வரர் கோயில் பகுதியை தென் திட்டை அல்லது தென்குடித்திட்டை எனவும் அழைக்கலானார்கள்.
*திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் பஞ்சலிங்கத் தலமாக விளங்குகிறது. இங்கு நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் அமைந்து நடுவில், மூலவராக வசிஷ்டேஸ்வரர் அருள்கிறார்.
*ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் சூரிய ஒளிக்கதிர்கள் இறைவன் மீதுபடுகிறது.
*கருவறை விமானத்தின் உட்புறத்தில் சந்திர காந்தக் கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. இந்த சந்திர காந்தக்கல் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி 24 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சொட்டு நீராய் இறைவன் வசிஷ்டேஸ்வரர் மீது விழச்செய்கிறது. சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கிய சிவபெருமான் தன்னுடைய தலையில் சந்திரனை வைத்துக்கொண்டார். அதற்கு நன்றிக் கடனாக சந்திரன் இவ்வாறு 24 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சொட்டு நீரை இறைவன் மீது விழுமாறு செய்கிறார்.
*அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் மும்மூர்த்திகளுக்கு சக்தியையும், ஞானத்தையும் அருளியவர். கால பைரவரின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கியவர். குரு பகவானுக்குத் தேவகுரு என்ற பதவியை அருளியவர்.
*அன்னை சுகந்த குந்தளாம்பிகை தெற்கு நோக்கி நின்ற வடிவில் வசிஷ்டேஸ்வரருக்கு இணையாக உயர்ந்த பீடத்தில் உள்ளார் . மகாப்பிரளய காலத்தில் உலகைக் காக்க இறைவனுடன் ஓடம் ஏறி வந்ததால், இத்தலத்தில் உள்ள இறைவியை "லோகநாயகி" என்றும், சகல மங்களங்களையும் தருவதால் "மங்களாம்பிகை" என்றும் அழைக்கிறார்கள்.
*கும்பகோணத்தில் சோமநாதன் என்பவர் குடும்பத்துடன் தனது வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இவரது வீட்டுக்கு வந்த ஜோதிடர் ஒருவர், ‘உங்கள் மகள் மங்களா 16-வது வயதில் விதவையாகி விடுவாள்’ எனக் கூறினார். அதைக்கேட்டு சோமநாதன் வருந்தினார். சிறிது காலத்தில் தஞ்சைக்கு அருகே உள்ள திட்டையில் உள்ள ஒருவருக்கும், மங்களாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திட்டைக்கு வந்த நாள் முதல் மங்களா, தனது கணவன் நீண்டநாட்கள் வாழ வேண்டும் என திட்டையில் உள்ள லோகநாயகி அம்மனை வணங்கி வந்தாள். ஒரு பவுர்ணமி தினத்தன்று மங்களா, லோகநாயகி அம்மனை சரணடைந்து, ‘எமனிடம் இருந்து என் கணவனின் உயிரை காப்பாற்றி, எனக்கு மாங்கல்ய பிச்சை கொடு’ என கண்ணீர் மல்க வேண்டினாள். அவளது பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய லோகநாயகி, மங்களாவின் கையில் விபூதியை கொடுத்து ‘இதை எமன் மீது இடு. உன் கணவன் நீண்ட ஆயுளுடன் இருப்பான். நீயும் நீண்ட நாட்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாய்’ என ஆசி கூறி மறைந்தார். மங்களாவும், இறைவியின் ஆணைப்படியே செய்தாள். வந்த எமன் மறைந்தான். மாங்கல்ய பிச்சை கொடுத்ததால் இத்தலத்தில் அன்னை மங்களாம்பிகா, மங்களேஸ்வரி என அழைக்கப்படுகிறார்.
*அம்மன் சந்நிதிக்கு எதிரே மேல் கூரையில் 12 ராசிகளுக்குரிய சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் இங்கு நின்று அம்மனை பிரார்த்தனை செய்து கொண்டால், தோஷங்கள் நீங்கி நலம் பெறுவார்கள்.
*வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சந்நிதிக்கு இடையே குரு பகவான் ராஜகுருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் அருள்பாலிக்கிறார். நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குருபகவான். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் "குரு பார்க்க கோடி நன்மை" என்ற பழமொழி ஏற்பட்டது. நவகிரகங்களில் சுபகாரகராக, நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருக்கும் குருபகவான் வியாழன், என்றும் பிரகஸ்பதி என்றும் வணங்கப்படுபவர். *குரு பகவானை வேண்டினால் ராஜயோகம் கிடைக்கும். மேலும் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும். இத்தலத்தில் ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடக்கிறது.
*குரு தலங்களாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் ஆகியவை விளங்குகின்றன.
(தெற்குப் பிரகாரத்தில் அருள்புரியும் தென்திசைக் கடவுளான தட்சிணாமூர்த்தி "ஞான குரு" ஆவார். நவகிரகத்தில் உள்ள குரு தேவகுரு ஆவார். இருவரும் வேறு வேறு. குருபெயர்ச்சி அன்று இடம் பெயர்பவர் நவகிரகத்தில்...
Read moreSri Vasisteswarar Temple in Thittai is a renowned Padal Petra Sthalam, one of the temples revered in the Tevaram hymns of the 7th-9th century Tamil Saiva canonical work by the three poet saints, Appar, Sundarar, and Campantar. Dedicated to Lord Shiva, this ancient temple holds great historical and religious significance.
The temple's architecture reflects the rich cultural heritage of the region, with intricately carved sculptures and majestic towers adorning its premises. Devotees visit Sri Vasisteswarar Temple to offer prayers and seek blessings for prosperity, peace, and spiritual fulfillment.
Legend has it that Sage Vasistha, one of the revered sages in Hindu mythology, worshipped Lord Shiva at this sacred site, hence the temple's name. The temple's sanctum sanctorum houses the presiding deity, Lord Vasisteswarar, along with his consort, Goddess Brahannayaki Amman.
Throughout the year, the temple hosts various festivals and rituals, attracting devotees from different parts of the country. These festivities are celebrated with great enthusiasm, adding to the vibrant atmosphere of the temple town of Thittai.
Sri Vasisteswarar Temple stands as a testimony to the rich religious and cultural heritage of Tamil Nadu, drawing pilgrims and tourists alike to its...
Read more