முகப்பு மற்றவை ஆன்மிகம் ஆலய வரலாறு திருமேனிகளை இறைவன்...
திருமேனிகளை இறைவன் இறைவியே தேர்ந்தெடுத்த தலம்.. குலசை முத்தாரம்மன் கோவில் சிறப்புகள்
குலசையில் அன்னை முத்தாரம்மன், சுவாமி ஞானமூர்த்தீசுவரரோடு வடதிசை நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கின்றாள்;
By - தினத்தந்தி
Update:2024-10-01 15:56 IST

திருச்செந்தூர் மாநகரிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் கடற்கரை நெடுஞ்சாலையில் திருச்செந்தூரிலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் குலசேகரன்பட்டினம் என்னு பேரூரில், கடற்கரைக்கு அருகாமையில் சுவாமி ஞானமூர்த்தீசுவரருடன் அமர்ந்திருந்து அன்னை முத்தாரம்மன் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருத்தலம் அமைந்துள்ளது.
பாண்டிய நாட்டை ஆண்ட குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருள் வழங்கியதால் இவ்வூர் பெருநகராக வளர்ச்சி பெற்றது. எனவே அந்த மாமன்னனின் பெயரால் இவ்வூர் குலசேகரன்பட்டினம் எனப் பின்னர் அழைக்கப்படலாயிற்று.
இந்நகரம் இயற்கைத் துறைமுகமாக சிறப்புற்றிருந்த காலத்தில் இலங்கை, சிங்கப்பூர், பர்மா போன்ற அயல் நாடுகளோடும் மும்பை, கொல்கத்தா, கள்ளிக்கோட்டை போன்ற பெருநகரங்களோடும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தது. நவதானியங்கள், தேங்காய், எண்ணெய், மரம் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டும், உப்பு, கருப்புக்கட்டி போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டும் செல்வச் செழிப்புடன் திகழ்ந்தது. பாண்டிய மன்னர்கள் அரபு நாடுகளிலிருந்து குதிரைகளை இத்துறைமுகம் வழியாக இறக்குமதி செய்தனர்.
அன்னையின் அருட்பார்வையால் ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதியில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழில் சிறப்புற்று விளங்கியது. இத்தொழிலைச் செய்யும் பெருமக்கள் இன்றும் பெருஞ்செல்வந்தர்களாக இருந்து அன்னைக்கு அரும்பணி செய்து வருகின்றனர். தங்க நாணயங்கள் அச்சிடும் அக்க சாலைகள் இருந்ததற்குச் சான்றாக அக்கசாலை விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது எண்ணத்தக்கது.
இந்நகரில் இருந்த உப்புத் தொழிற்சாலை மேலாளர் 'லோன் துரை' அவர்களின் ஆட்சியும் வீழ்ச்சியும் வரலாற்றில் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளது. பொருளாதாரத்திலும் வரலாற்றிலும் நீங்காத இடத்தைப் பிடித்துள்ள இந்நகரம் அன்னையின் அருளாட்சியால் இன்று சீரோடும் சிறப்போடும் திகழ்ந்துவருகிறது.
மூர்த்தியின் சிறப்பு:
மூர்த்தம் என்ற சொல்லுக்கு உருவம் என்று பொருள் இறைவன் உருவமாகவும், அருவமாகவும் அருவுருவமாகவும் அமர்ந்து காட்சி கொடுத்துக் கொண்டிருக்கின்றான். இங்கே அம்மையும், அப்பனும் ஒரு சேர ஒரே பீடத்தில் எழுந்தருளியுள்ளனர். இப்போது நாம் வழிபடும் உருவுக்குக் கீழ் பாதத்தின் பக்கத்தில் தானே தோன்றிய சுயம்பு உருவத்தைக் காணலாம். அது சுயம்புவாகத் தானே தோன்றியது, உளி கொண்டு செதுக்காதது.
வீரகாளியம்மன், பத்ரகாளியம்மன், கருங்காளியம்மன், முப்புடாரிஅம்மன், முத்தாரம்மன், உச்சினிமாகாளியம்மன், மூன்று முகம் கொண்ட அம்மன், வண்டி மறித்த அம்மன் என்று அட்டகாளிகளுக்கும் (எட்டு காளிகள்) ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்த அட்டகாளிகளின் முதன்மையானதாகச் சிறந்து விளங்கும் தாய் முத்தாரம்மனாகும். இந்த அம்மனைத் தரிசித்து வந்தால் தரித்திரங்கள் விலகி அனைத்து நலன்களையும் பெறுவர்.
ஆலயத்தில் இப்போது வழிபடும் திருமேனியை எவ்வாறு பெரிய அளவில் வடிவமைப்பது? என்று பக்தர்கள் குழம்பிப் போயிருந்த சமயத்தில் அம்பாள் திருக்கோவில் அர்ச்சகர் கனவில் தோன்றி "மகனே எனது உருவத்தை வேண்டுமெனில் குமரி மாவட்டம் மைலாடி என்னும் ஊருக்குச் செல்க" என்று கூறி மறைந்தாள். அதே சமயம் அம்பாள் சாமியுடன் மைலாடி ஊரில் சுப்பையா ஆசாரி என்பவர் கனவில் தோன்றி "மகனே எங்கள் வடிவத்தை உற்று நோக்கு இவ்வடிவத்தை ஒரே கல்லில் ஒரே பீடத்தில் வடித்துக்கொடு, இக்கல் தென் திசையிலுள்ள ஆண் பெண் பாறையில் உள்ளது. குலசைப் பக்தர்கள் வருவர். அவர்களிடம் இப்பாறையிலுள்ள கல்லிலிருந்து வடித்தெடுத்த திருமேனியைக் கொடுத்தனுப்பு" என்று கூறி மறைந்தாள். அதன்படியே மைலாடி சென்று சிற்பி சுப்பையா ஆசாரியைச் சந்தித்து அவர்களால் வடித்தெடுக்கப்பட்ட திருமேனியை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து வணங்கி வருகின்றனர். இவ்வாறு இறைவனும் இறைவியும் தங்களின் திருமேனிகளை தாமே தேர்ந்தெடுத்த சிறப்பு மிக்கது இத்திருத்தலமாகும்.
தீர்த்தம் - சிறப்பு:
தீர்த்தங்களில் சிறந்தது கடல் தீர்த்தம், புண்ணிய நதிகள் அனைத்தும் கடலில் கலப்பதால் இதை மகா தீர்த்தம் என்பர். தீர்த்தத்தில் சிறந்த கடல் தீர்த்தமே இத்திருக்கோவிலுக்கு தீர்த்தமாக உள்ளது. அதிலும் குறிப்பாக கங்கை நதி கலக்கும் வங்கக்கடல் தீர்த்தமாக அமையப்பெற்றது மாபெரும் சிறப்பாகும். கங்கை நதி கலப்பதால் வங்கக்கடலைக் கங்கைக்கடல் எனவு
காசியில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள காசி விசுவநாதர் - விசாலாட்சி ஆலயத்திற்கு கீழ்ப்புறம் தென்வடலாக கங்கை நதி உள்ளது. இங்கும் இந்த ஆலயத்திற்குக் கீழ்ப்புறம் தென்வடலாக கங்கைக்கடல்...
Read moreKulasai Dasara(Dussehra) is a cult rural festival celebrated during the famous Dussehra festival time in the 300 years’ old Sri Mutharamman Temple or Kulasai Mutharamman Temple located in the small town Kulasekharapatnam, near Thiruchendur in Thoothukudi District of Tamil Nadu. The festival continues for ten days with the start of Navaratri and finishes on the tenth day, ie on Dussehra in the celebration of killing the demon called Magisasuran. The mythological epic tells the story of the town dwellers who once approached their Goddess being helpless to the torture of the cruel mighty demon Magisasuran. Then a baby child took birth with the power of the Goddess and was named Lalithambigai. The baby grew up into a full grown adult by a supernatural power just within 9 days, which are considered the days of Navaratri. On the 10th day, she got herself converted into the almighty symbol of power as Annai Parasakthi Lalithambigai with the razing desire of eliminating evil from the earth. And thus she came strongly on Magisasuran and destroyed him as the symbol of the sin of evils on this day which in turn is being started to be celebrated as Dasara(Dussehra) here. This was the insight of the Kulasai Dussehra festival, though the same festival in the name of Dussehra is celebrated all over India in different places in...
Read moreLocated on the seashore of the Gulf of Mannar, a formidable temple stands in Kulasekarapattinam. The deities Mutharamman and Ganamoortheeswarar face north in order to bestow their blessings upon their devotees. Although the temple is often crowded, visitors can still complete their darshan expeditiously. On Dhasara, millions of devotees flock to the temple, and on the peak festival day, Soorasamharam occurs. People congregate on the beaches to observe the event and receive divine blessings. Devoted devotees wear beads garlands around their necks and come to the temple of God's grace after fasting. A large number of devotees from Tirunelveli, Thoothukudi and Kanyakumari districts flock to this temple on the occasion of the Dhasara festival. Due to the high foot traffic, hygiene standards may be lacking in the area, and the temple premises may not be kept tidy. It is imperative for visitors to prioritize their health when consuming food items from the vendors. This place is conveniently accessible by public transportation. The daytime brings about excessive heat. However, there is an ample amount of space inside the temple premises where devotees can...
Read more