எங்கேயாவது ஒரு ட்ரிப் போலாமென யோசிக்கையில் எல்லோருடைய முதல் விருப்பமும் குற்றாலம் தான். ஆனால் இன்னும் சீசன் முழுமையாக தொடங்காத நிலையில் தண்ணீர் வரதில்லாததினால் அங்கே போவது கேன்சல். சரி வேறெங்கே போலாமென யோசிக்கையில் வந்தயிடம் கன்னியாகுமரி மற்றும் காயல்பட்டினம் கடற்கரைகள்.
தண்ணீர் விழுகிறதா என விசாரித்து விட்டு தான் அருவிகளுக்கு செல்ல முடியும். ஆனால் கடலுக்கு அப்படியில்லை. எந்நேரமும் தண்ணீர் இருக்கும் ஒரே இடம் தானே !!
பிள்ளைகளை கூட்டிச் செல்ல காயல்பட்டினம் கடற்கரை சிறந்ததென அங்கேச் கிளம்பியாகி விட்டது. உம்மாவுக்கு காயல்பட்டினம் மற்றும் கல்லாமல்லி எனும் காயாமொழி கடற்கரை மீது தனிப்பெரும் விருப்பம் உண்டு.புஹாரி சரீப் மஜ்லிஸ் நடக்கையில் தவறாமல் கலந்து கொள்ளும் உம்மா, காயல்பட்டினம் கடற்கரையை பற்றி சிலாகித்துச் சொல்வார்கள்.
காயல்பட்டினம் செல்லும் வழியில் அமைந்திருக்கும் கிராமங்கள் எல்லாம் இயற்கையின் புகைப்படங்கள். சாலையின் இருபுறமும் வயல்வெளிகள், வாழைத்தோப்புகள், பனை மரங்கள் என பச்சையும் பச்சை சார்ந்த இடங்களாக இருப்பது கண்களுக்கு குளிர்ச்சி. சிலயிடங்களில் வயல்களில் கருவேல மரங்கள் வளர்ந்து நிற்பது ஆபத்தின் அறிகுறி...
சாலையோரங்களில் பிளம்ஸ், மங்குஸ்தான், தவுன் ( தேங்காய் குருத்து) வெள்ளரிக்காய் , பலாப்பழம் என கண்ணுக்கும் வாயிற்க்கும் திருப்தியளிக்க கூடிய விஷயங்கள் நிரம்பி இருக்கிறது.
திருச்செந்தூர் சாலையின் மும்முனை சந்திப்பின் வலதுபுறம் திரும்புகையில் தென்படும் உப்பளங்கள் கடற்கரையின் முகவரியை நமக்கு காட்டி விடுகிறது. காயல்பட்டின விலக்கில் திரும்பியதும் ஒரு குறுகலான பாதை நம் கைகளை பிடித்துக்கொண்டு கடற்கரைக்கு அழைத்து கூட்டி செல்கிறது.
சாலை முடிவில் கடற்கரையையும் ஆறுகளையும் பெற்ற ஊர்கள் பாக்கியம் பெற்றவை. கடலையும் ஆற்றையும் எவ்வளவு ரசித்தாலும் சலிப்புத் தட்டுவதேயில்லை.
ஐந்து மணியளவில் கடற்கரையில் கூட்டமுமில்லை காற்றுமில்லை.. ஆனால் அலைகள் அதன் வேலையை மறக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. கரைத்தொடும் அலைகள் உண்டாக்கும் சப்தம் சங்கீதமாக காதில் ஒலிக்கிறது. தூரத்திலிருந்து பார்க்கையில் கடலலைகள் , குதித்தோடும் குதிரை போலத் தெரிகிறது.
நுரையோடு கரைத்தொடும் அலைகளில் கால் நனைக்க பெரியவர்களே குழந்தைகளாக மாறிப்போகையில் குழந்தைகளை பற்றி சொல்லவா வேண்டும்.விரிப்பு விரித்து பெரியவர்கள் அமர்ந்துக் கொள்ள குழந்தைகள் எல்லாம் அலையோடு கதைப்பேச ஓடிவிட்டார்கள்.
குழந்தைகளை கண்ட குதூகலிப்பில் அலைகள் கொஞ்சம் அதிகமாக நடனமாடியது. குழந்தைகளையும் அலைகளையும் யாரும் கட்டுப்படுத்தவே முடியாது.
வீட்டிலிருந்து கொண்டுவந்த சமோசா மற்றும் கருப்பட்டிச் சாயாவை குடிக்கையில் அப்படித்தான் இருக்கிறது. வழக்கமான சாயா தான், ஆனாலும் சுவை அதிகமாயிருக்கிறது. கடல் காற்று தீண்டிய காரணமாக இருக்குமோ !!
நேரம் செல்லச் செல்ல கூட்டமும் அலையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சாரை சாரையாக மக்கள் வந்துக்கொண்டேயிருக்கிறார்கள். இனிமேலும் கடலில் நிற்பது நல்லதில்லையென பிள்ளைகளை கஷ்டப்பட்டு கரைக்கு கூட்டிட்டு வந்தாச்சு.
கடற்கரையில் விற்கும் கஞ்சி, வாடா, கட்லட், வேர்க்கடலை , சுண்டல் என எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு அப்படியே கடற்கரை கடைவீதியை சுற்றி வருகையில் குலுக்கி சர்பத் , ஸ்பிரிங் பொட்டேட்டோ, பானி பூரி , பால்கோவா கடைசியாக கொஞ்சம் ஜாங்கிரியை உள்ளே தள்ளிவிட்டு வேனுக்கு வந்தாகி விட்டது.
எங்கேனும் இவ்வாறு சென்று வருகையில் ஏதோ refresh செய்யப்பட்ட கம்ப்யூட்டர் போல இருக்கு. வீசும் காற்றிலும் அடிக்கும் அலையிலும் நம் சோகங்களை தொலைத்து விட்டு புதிதாக எதையோ எடுத்து வந்தது போல ஒரு உணர்வு...
உடை மற்றும் தேகத்தில் ஒட்டிய மண்துகள்கள் மூலம் தன்னை நம் வீடு வரை நீட்டி கொள்கிறது சமுத்திரம் !!
ஏதோ ஒரு சாலையின் முடிவில் உங்கள் சோகங்களும் கஷ்டங்களும் மறைந்து போகலாம்.. அடுத்த திருப்பத்தில் உங்களுக்கான மகிழ்ச்சி காத்திருக்கலாம்....
Read moreNot much of a park. Small place near the beach front.
Local administration should develop the place to attract a crowd. Like rest room, clothes changing room and waste collection bins.
The beach is shallow and has clean water , morning and afternoon with very little crowds. The evening has some crowds which are less compared to tiruchundur beach.
There are some nice restaurants nearby that have vegetarian and non-vegetarian options.
Nearby there is an ancient Shiva temple, Not known for outside tourists. Only known for the local population.
Kayalpattinam is known for palm jaggery. There are two shops which sell very good quality palm jaggery .To find the shop has to ask local persons for directions Jaggery is worth it.
The kayalpattinam residents are very reliable and...
Read moreKayalpatnam—A Hidden Gem by the Sea
I absolutely love my hometown, Kayalpatnam. It’s a place where tradition and tranquility meet. The coastal breeze, the soulful call to prayer, the warmth of the people, and the rich Islamic heritage make it truly special. From the historic mosques to the delicious home-cooked meals, every corner of Kayalpatnam carries a story and a sense of peace.
Whether it’s the serene evenings by the shore or the vibrant Jumma gatherings, this town has a heartbeat that stays with you. If you’re looking for a place that nourishes both the soul and the senses, Kayalpatnam is it.
Forever proud to call it...
Read more