வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய 'வேல் மாறல்'
... வேலும் மயிலும் துணை ...
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.
( ... இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் ... )
( ... பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் "திரு" என்ற இடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் ... )
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )
சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை அறுத்(து)எறிய உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )
தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )
பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )
சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள் சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )
துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )
தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )
பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன் இசைக்(கு)உருகி வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )
திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )
சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )
தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )
பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )
திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )
சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )
சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )
சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும் இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )
சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )
பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )
திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )
சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )
தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு வலத்தும்இரு புறத்தும்அரு(கு) அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )
பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன் இசைக்(கு)உருகி வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )
திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என முகட்டின்இடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )
துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர் நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு)ஓர் துணை ஆகும் ......
Read moreதமிழ் நாட்டின் தென்காசி மாவட்டத்தில் தென்காசி-செங்கோட்டை நெடுஞ்சாலையில் 5கி.மீ தொலைவிலும்... குற்றாலம்-செங்கோட்டை நெடுஞ்சாலையில் 2 கி.மீ தொலைவிலும்.. சித்ரா நதிக்கரையில் இலஞ்சி ஊரிலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள.. வள்ளி , தேவசேனா சமேத அருள்மிகு இலஞ்சிக்குமாரர் மற்றும் இருவாலுக ஈசர்க்கினியாள் சமேத இருவாலுக நாயகர் எழுந்தருளி அருள் பாலிக்கும் திருக்கோவில்... அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில்.( குமார கோவில்) திருவிலஞ்சி என்னும் இத்திருத்தலத்தில் சித்ரா நதி தீர்த்தத்தில் கபிலர், காசிபர், துருவாசர் ஆகிய மும்முனிவர்களின் ஐயப்பாட்டை நீக்கி அன்னார்கள் வேண்டிக்கொண்டதிற்கிணங்க இத்தலத்தில் ‘இலஞ்சி குமாரராக’ முருகப் பெருமான் வள்ளி,தேவசேனா சமேதராக எழுந்தருளி காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் பார்வதி – பரமேஸ்வரரின் திருமணத்திற்காக யாவரும் இமயம் சென்ற போது பாரப்பழுவினால் வடதிசை தாழ, தென்திசை உயர்ந்த பொழுது, இதனை சமப்படுத்த சிவபெருமானின் ஆணையை ஏற்று தென்பகுதி வந்த குறுமுனியாகிய அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ‘வெண்மணலாலான சிவலிங்கம்’ இத்திருக்கோயிலில் உள்ளது. தென் திசை புறப்பட்ட அகத்தியர் பொதிகைமலையின் குற்றாலத்திற்கு வந்தார். அப்போது குற்றாலத்தில் சிவன் கோவில் அமைக்க எண்ணிய அகத்தியர்க்கு தடங்கல்கள் ஏற்பட அவர் சித்ரா நதி தீர்த்தத்திற்கு வந்து வெண்மணலால் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார். தேவநாகரியில் வெண்மணல் ”இருவாலுகம்” என்று அழைக்கப்படுவதால் இத்தலத்துச் சிவனுக்கு இருவாலுக ஈசர் என்ற பெயர் ஏற்பட்டது. வந்த வேலை முடிய வேண்டுமே என எண்ணிய அகத்தியர் முருகப்பெருமானை வேண்டினார், முருகப்பெருமானும் அகத்தியர் முன்னே தோன்றி அவருக்கு அறிவுரை கூற அகத்தியரும் அவ்வாறே செய்து தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றினார். நீரும்,தாமரையும் நிறைந்த இடம் எனப் பொருள் கொண்ட இலஞ்சி என்னும் இத்தலத்தில் எழுந்தருளி அருள்புரியும் திரு இலஞ்சிகுமாரரை அருணகிரிநாதர் தம்முடைய திருப்புகழில் பாடிப்பணிந்து வணங்கியுள்ளார். இலஞ்சி என்ற சொல்லுக்கு மகிழம் என்ற பொருளும் உண்டு. இக்கோவிலின் தல விருட்சம் மகிழ மரம். கி.பி 14 ம் நூற்றாண்டில் மாறவர்மன் குலசேகரபாண்டியன் இக்கோவிலைப் புதுப்பித்துச் செப்பனிட்டுக் கட்டுவித்தார். இத்திருக்கோவிலின் சுற்று மதில் சுவரை 15ம் நூற்றாண்டில் சொக்கம்பட்டி ஜமீன்தாரான காளத்திய பாண்டியன் கட்டுவித்துச் சிறப்புச் செய்துள்ளார். இத்திருக்கோயில் இருவாலுக ஈசர் என்றும் இருவாலுக ஈசர்க்கினியாள் என்றும் சிவத்தலமாக இருந்த போதிலும் திரு இலஞ்சி குமாரர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அம்மை அப்பருடன் எழுந்தருளி உள்ளதால் இங்கு திருமணம் செய்வது விசேஷம். ஆகவே இங்கு அதிக அளவில் திருமணம் நடப்பது இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பு ஆகும். மேலும், முருகப்பெருமான் ரிஷிகளின் வேண்டுகோளின் படி வரத்தை இன்றும் கொடுத்தருள்கிறார். எனவே இத்தலத்து திருவிலஞ்சிக்குமாரர் வரதராஜப் பெருமான் என்றும் அழைக்கப்படுகிறார். திருக்குற்றாலத்தின் ஈசான திசையில் அமைந்துள்ள இலஞ்சியில் குடிகொண்டுள்ள குமரனிடம் கபிலர்,துர்வாசர் காசிபர்,ஆகியோர் “உண்மையான பரம்பொருள் யார்?” என்று கேட்க “நானே பரம்பொருள்” என்று சொல்லித் தனக்குத் தானே வரதராஜப்பெருமான் எனும் தொல்பெயர் சூட்டிக் கொண்டார். வுரதன் என்றால் வரம் தரும் வள்ளல். வேண்டுவோர்க்கு வேண்டியது கொடுக்கும் வள்ளலாக இத்தலத்துக் குமரன் உள்ளார். முருகப்பெருமான் கருவில் உதித்த அவதாரம் கிடையாது. சிவனுடைய அங்க அவதாரம் என்பது குறிப்பிடத்தக்கது. அருணகிரிநாதரின் கந்தரனுபூதியில் வரும் ‘கருதாமறவா” எனத் தொடங்கும் பாடலின் கடைசி வரியில் ‘வரதா முருகா மயில் வாகனனே” என்று பாடுகிறார். ஆகையினால் முருகனுக்கும் வரதராஜப் பெருமான் என்னும் பெயர் பொருந்தும். இங்கு தினசரி ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.. சித்திரை பிரமோத்ஸவம், வைகாசி விசாகம், நவராத்திரி,கந்தசஷ்டி, தனுர் பூஜை, தைபூசம், மாசிமகம் ஆகிய விழாக்கள் சிறப்பாகக்...
Read moreதிருவிலஞ்சி குமார கோவில்
இலஞ்சி திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இலஞ்சி, தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் பாதையில் உள்ள திருக்குற்றாலம் அருகிலுள்ள இச்சிற்றூர் மிகவும் பசுமையாகவும் ஊர். திருவிலஞ்சி குமார கோவில்: நதி : சித்ராநதி தலவிருக்ஷம் : மகிழமரம்
இலஞ்சியில் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான கோவில் திருவிலஞ்சி குமார கோவில் ஆகும். இங்கு அருள்பாலிக்கும் குமரன் இளமை பொருந்தியவராகக் காட்சியாளிகிறார். தமிழ்க் கடவுள் இவ்விதம் இங்கே தோன்றியமைக்கும் காரணம் திரிகூடமலையின் வடகீழ்த்திசையில் காசியபர், கபிலர், துர்வாசர் மூன்று முனிவர்களும் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். பலவேறு தத்துவங்களையும், அதன் நுணுக்கங்களையும் ஆய்ந்து பேசிக் கொண்டிருந்த அவர்களுக்குள் ஒரு சந்தேகம். இவ்வுலகம் இல் பொருளா? உள் பொருளா என்பதே! கபிலர் இல் பொருள் எனத் தன் வாதத்தை நிலைநாட்ட, காசியபரும், துர்வாசரும் முத்தொழில்களையும் செய்யும் ஈசன் இல்லாது இல் பொருள் தோன்றுவது எங்கனம் எனக் கேள்வி எழுப்பினர். உலகம் உள் பொருளே எனச் சொல்ல, கபிலரும் நன்கு யோசித்து அவர்கள் கருத்தில் உண்மை இருப்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்கிறார். ஆனாலும் மூவருக்கும் மீண்டும் வாதம் ஆரமபித்தது. உள் பொருளான உலகின் உண்மைப் பொருள் யார் என்று வாதம் புரிந்து கபிலர் திருமாலே எனச் சொல்ல பிரம்மபுத்திரனான காசியபரோ, பிரம்மனே எனச் சொல்ல , ருத்ராம்சமான துர்வாசரோ ருத்ரரே எனச் சொல்ல குழப்பம் ஏற்பட்டது. குழப்பத்தைத் தீர்க்கவேண்டும், அதற்கென நடுநிலை வகிக்கும் ஆள் வேண்டுமே யாரைக் கூப்பிடுவது என யோசித்து, யாரேனும் ஒரு இளைஞனே தகுதியானவன் என்று எண்ணுகின்றனர். அப்போது குமரக் கடவுள் ஓர் கட்டிளம் காளையாக அவர்கள் முன் தோன்றினான். (சிலர் கபிலரும், துர்வாசரும் முருகனை வேண்டியதாகவும் கூறுவார்கள்). அவன் தன் உண்மை உருவை அவர்கள் மூவருக்கும் காட்டி ஆதிப்பரம்பொருள் தாமே என்றும், மூவினையும் செய்யும் மும்மூர்த்திகளாகத் தன்னை மூன்று முனிவர்களிடமும் காட்டியும் யாமே படைத்தல், காத்தல், அழித்தல் முத்தொழிலையும் செய்பவர் என உணர்த்தினார். அவரை வணங்கிய முனிவர்கள் வழிபட்ட இடத்திலேயே அதே கட்டிளம் காளைக் கோலத்தில் இன்றளவும் நின்றுகொண்டு வேண்டியவர்க்கு வேண்டியவற்றை அருளுகின்றான் முருகன்.
மேலும் இங்கு அமைந்துள்ள ஒரு சிறப்பு இந்த ஊரின் ஈசன் அகத்தியரால் மணலால் பிடிக்கப் பட்டு வணங்கப் பெற்றவர். காரணம் குற்றால நாதரைத் தரிசிக்க வந்த அகத்தியருக்கு அங்கே தரிசனம் கிடைக்கவில்லை அதனால் பெருமாளே காட்சி கொடுக்கிறார். பின் அகத்தியர் இலஞ்சி வந்து முருகனை வேண்ட, முருகனும் அருள் புரிகிறார். முருகனின் ஆலோசனைப்படி அங்குள்ள சிற்றாற்றின் கரையிலேயே குமரனுக்கு அருகேயே அவர் தந்தைக்கும் வெண்மணலால் லிங்கம் பிடித்து வழிபட்டார் அகத்தியர். அகத்தியர் அவ்வாறு பூஜை செய்த லிங்கமே இன்றும் இருவாலுக நாயகர் என்னும் பெயருடன் வழங்கப் படுகிறார். இங்கே ஈசனின் அருள் கிடைத்ததுமே அகத்தியர் திரும்பக் குற்றாலம் செல்கிறார். மாமனைத் தள்ளிவிட்டு அங்கே தந்தையைக் கொண்டு வந்த சாமர்த்தியசாலி முருகனே...
Read more