This historical temple for Lord Shiva is located on the Kadananathi river bank. The work on the pillars tells the cultural importance of this place. Peaceful and good maintenance too. Jun2022 Kumbhabesakam completed.
Nandi Bhagwan makes Shivsailam proud!
Sivasailapati-para Mahalyani Ambal Temple is located on the banks of Karuna River in Sivasailam, west of Azhwarkurich. The temple is situated in such a way that Swami, Ambalum, who is seated towards the west, gives a view to Atri Maharishi at Atrimalai. Upon entering the temple, Lord Nandi is sitting comfortably facing east.
History says that the Nandi of the temple was designed by Mayan, the master of sculpture. Because the sculpture is so realistic in its sculpting, Nandi any Lord Idol comes to life.
It is said that the position was reached and immediately, a line was drawn on the back of the Nandi statue and the sculptor was asked to do so. That is why Lord Nandi here is seen sitting on his right leg and standing up.
Garlands are decorated very realistically on Nandi. Nandi worshiped even though he performed the Abhishekam. It's even better if the idol looks shiny and not stuck on top of it. Every year on the last Friday of the month of Aadi, a festival called Nandikalapam is held for Lord Nandi. Today (11th) Aadi Kalapa Vaipavam is going to be held by the Aawarkurichi Chavadi Ayan Chidambarampillai Kudumbam for the last 123 years.
Natiya Deeparathana takes place on Nandikalapa Vaibhava. The day before that, Nandhikalapam day Nandhi decorated of maakapu. After the Nandhikalapam the next day (Saturday) Santhanam kapu removed and the regular Pooja...
Read more🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் இயற்கை வளம் கொழிக்கும் சோலைகளின் மத்தியில் அமையப் பெற்றுள்ளது சிவசைலம் பரமகல்யாணி அம்மை உடனுறை சிவசைலநாதர் திருக்கோவில்.
தேவாரத்தில் வைப்புத் தலமாக வைத்து பாடப்பட்டுள்ள இக்கோவிலின் புராணப் பெயர் "அத்தீச்சுவரம்" ஆகும்.
சுவாமி பெயர்: சிவசைலநாதர். அம்மை பெயர்: பரமகல்யாணி அம்மை. திருக்கோவில் விருட்சம்: கடம்ப மரம். தீர்த்தங்கள்: கடனை ஆறு (கடனா நதி). சிறப்பு சன்னதி: நந்தி, திருவிழா கோவில் சிவந்தியப்பர் சன்னதி. சிவசைலம் கோவில் வரலாறு
முற்காலத்தில் கடம்ப வனமாக இருந்த இந்த பகுதியில் அத்திரி முனிவர், அகத்தியரின் வழிகாட்டுதல் படி, இங்கு ஆசிரமம் அமைத்து தன் மனைவி மற்றும் சீடர்களோடு தங்கி இருந்து தவம் இயற்றி வந்தார். அப்போது ஒரு நாள் அவரின் சீடர்கள் பூஜைக்கு தேவையான மலர்களை சேகரிக்க சென்ற வேளையில், ஓர் இடத்தில் பசுவொன்று தாமாக வந்து பால் சொறிவதை கண்டு அதிசயித்து நிற்கின்றனர். உடனே அந்த இடத்தை தோண்டி பார்க்க அங்கு சுயம்பு உருவில் ஓர் லிங்கம் காட்சியளித்தது. உடனே அதனை தங்கள் குருவாகிய அத்திரி முனிவரிடம் தெரிவிக்க, அவரும் அங்கு வந்து அந்த லிங்கத்தை எடுத்து பூஜித்து வந்தார். அவருடைய பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் அத்திரி மகிரிஷிக்கு காட்சியளிக்கிறார். அவரை போற்றி வணங்கிய அத்திரி மகரிஷி அகத்தியருக்கு திருமண கோலம் காட்டியதை போல தனக்கும் திருமண கோலம் காட்டியருள வேண்டுகிறார். அவரின் வேண்டுதலை ஏற்று அத்திரி மகரிஷிக்கு மேற்கு நோக்கி இடப வாகனத்தில் பார்வதியோடு அமர்ந்தபடி திருமண கோலம் காட்டியருளினார்.
பிற்காலத்தில் அத்திரி முனிவர் வணங்கிய அந்த சுயம்பு லிங்கம் புற்று சூழ்ந்து மறைந்து விட்டது.
இதற்கு பின் வந்த காலத்தில் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய இந்த பகுதியை சுதர்சன பாண்டியன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு மக்கள் செல்வம் இல்லாத காரணத்தினால் அந்த வரம் வேண்டி முனிவர்களை வைத்து அசுவ மேத யாகம் நடத்துகிறான். சீரும் சிறப்புமாக நடைபெற்ற இந்த யாகத்தின் முடிவில் எந்த திசைக்கும் சென்று திரும்பக் கூடிய தனது அரசாங்க குதிரை ஒன்றை அலங்கரித்து அதனுடன் தன் சகோதரன் ஒருவனையும் அனுப்பி வைக்கிறான். அந்த குதிரை முதலில் தெற்கு திசையிலும், இரண்டாவதாக கிழக்கு திசையிலும் சென்று வெற்றி வாகை சூடி திரும்பியது. அடுத்ததாக அந்த குதிரையை மேற்கு திசை நோக்கி செலுத்த, அந்த குதிரை இந்த சிவசைலம் பகுதிக்குள் வரும்போது, சிவபெருமானின் ஆணைக்கு இணங்கி முருகப்பெருமான் அந்தணச் சிறுவனாக சென்று அந்த குதிரையை அடக்கி ஓர் மரத்தில் கட்டுகிறார். இதனால் வெகுண்ட மன்னனின் சகோதரன் அந்த சிறுவனிடம் சண்டையிட்டு தோற்கிறார். இந்த விஷயம் அறிந்த சுதர்சன பாண்டியனும் கோபம் கொண்டு அவ்விடத்திற்கு வர, சிறுவனுக்கும் மன்னனுக்கும் இடையே சண்டை நீள்கிறது. இறுதியில் மன்னனின் மணி முடி கீழே விழ சிறுவனால் மன்னன் வீழ்த்தப்படுகிறார். அப்போது முருகப்பெருமான் தன் சுய உருவம் காட்டி அங்கு புற்றுக்குள் சுயம்பு லிங்கம் இருப்பதையும் சுட்டிக் காட்டி மறைந்து விடுகிறார்.
அந்த நேரத்தில் மன்னன் தான் என்ற அகப் பற்றும், தான் நடத்திய வேள்வி குதிரை இது என்ற புறப் பற்றும் நீங்கி தெளிவு பெறுகிறான். உடனே சுயம்பு லிங்கத்தை வெளியே எடுத்து வழிபட, அவன் செய்த வேள்வியின் பலனாக அவனுக்கு முருக பெருமானே மகனாகத் தோன்றினார். அந்த மகனுக்கு குமார பாண்டியன் எனப் பெயர் வைத்து மகிழுந்த மன்னன், தனக்கு அருள்புரிந்த சிவசைலநாதருக்கு கோவில் எழுப்பினான் என்பது இத்தல வரலாறாக கூறப்படுகிறது.
பரமகல்யாணி அம்மை வரலாறு:(History of Paramakalyani Amman)
இத்தலத்தில் அம்பாளுக்கு தனி சன்னதி கட்ட ஏற்பாடாகி கொண்டிருந்த வேளையில், சிவசைலத்திற்கு அருகே உள்ள சிநேகபுரி (தற்போதைய ஆம்பூர்) என்னும் ஊரில் வாழ்ந்த அந்தணர் ஒருவரின் கனவில் தோன்றி அந்த ஊரில் உள்ள கிணறு ஒன்றில் அம்மையின் திருமேனி ஒன்று நான்கு கரங்களுடன் ஜலவாசமாக இருந்து வருவதாகவும், அந்த அம்பாள் திருமேனியை எடுத்து சிவசைலத்தில் கட்டப்படும் கோவிலுக்குள் பரமகல்யாணி என்ற பெயர் சூட்டி பிரதிஷ்டிக்கும் படி கூறியருள்கிறார் சிவபெருமான். அந்த அந்தணரும் தான் கண்ட கனவை ஊர் மக்களுக்கும், மன்னனுக்கும் தெரியப்படுத்தி, அந்த குறிப்பிட்ட கிணற்றில் தேடிட சிவபெருமான் கூறியது போலவே ஒரு நான்கு கரங்கள் கொண்ட அழகிய அம்மையின் திருவுருவ சிலை கிடைக்க பெற்றது. அந்த அம்மையின் திருவுருவை மங்கள வாத்தியங்கள் முழங்க அங்கிருந்து எடுத்து வந்து சிவசைலம் கோவிலில் பிரதிஷ்டை செய்ததாகவும் வரலாறு கூறுகிறது.
சிவசைலநாதர் சடைமுடி காட்டிய வரலாறு: சிவசைலம் திருக்கோவிலை கட்டி முடித்து கும்பாபிஷேகம் செய்து வைத்த சுதர்சன பாண்டிய மன்னன் பிற்காலத்தில் ஒர் நாள் சிவசைலநாதரை தரிசிக்க அழகிய மாலை பொழுதில் கோவிலுக்கு வர, அப்போது...
Read moreசிவசைலநாதர் கோவில் சடைமுடியோடு காட்சியளிக்கும் சிவபெருமான்
திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 57 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ள தேவார வைப்புத் தலமான சிவசைலத்தில் அமைந்துள்ளது சிவசைலநாதர் கோவில். இக்கோவிலின் புராணப் பெயர் 'அத்தீச்சுவரம்' ஆகும்.இறைவன் திருநாமம் சிவசைலநாதர். இறைவியின் திருநாமம் பரமகல்யாணி. இத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உறையும் மூலவர் சிவசைலநாதரை நான்கு திசைகளில் இருந்தும் வழிபடலாம். மேற்கு திசையில் கருவறை வாயில் வழியாகவும், மற்ற மூன்று திசைகளில் சுற்றுச்சுவரில் உள்ள சாளரங்களின் வழியாகவும் சுவாமியை தரிசிக்கலாம். இப்படி கருவறையின் மூன்று சுற்று சுவர்களிலும் சாளரம் உள்ள சிவாவயத்தை காண்பது அரிது. சிவசைலம் திருக்கோவிலை கட்டியவன் சுதர்சன பாண்டிய மன்னன். பிற்காலத்தில் ஒர் நாள் சிவசைலநாதரை தரிசிக்க சுதர்சன பாண்டிய மன்னன் கோவிலுக்கு வர, அப்போது கடனை ஆற்றில் வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடியது. இதனால் மன்னன் ஆற்றை கடந்து கோவிலுக்கு செல்ல முடியவில்லை. அதற்குள் இருட்டி விடவே அர்த்தசாம வழிபாடு முடிந்து கோவில் நடை சாத்தப்படுகிறது. எனவே மன்னனுக்கு, சுவாமிக்கு சாற்றிய பூ மாலை மற்றும் பிரசாதங்களை அர்ச்சகர் கொண்டு வந்து தருகிறார். அதனை பெற்று மகிழ்ந்த மன்னன் மாலையை கண்களில் ஒற்றிக் கொள்ள முற்பட்ட போது அதில் பெண்ணின் நீள தலை முடி ஒன்று இருப்பதை கண்டு சினம் கொள்கிறார். சுவாமிக்கு சாற்றிய மாலையில் கூந்தல் முடி எப்படி வந்தது என ஆவேசமாக கேட்க, செய்வதறியாத அர்ச்சகர் அது சிவசைலநாதரின் தலையில் உள்ள சடைமுடியே என கூறிவிடுகிறார். என்ன சுவாமியின் தலையில் சடைமுடியா? அந்த அதிசயத்தை நாளை எனக்கும் காட்ட வேண்டும் எனக் கூறி சென்று விடுகிறார். மறுநாள் கோவில் திறக்கப்பட மீண்டும் மன்னன் தன் படைகளுடன் திருக்கோவிலுக்கு வருகிறார். தான் கூறிய பொய்யை நினைத்து பயந்து சிவசைலநாதரிடம் மன்னிப்பு கேட்டு தன்னை காத்து அருளும் படி அர்ச்சகர் மனதினுள் வேண்டிக் கொண்டே, மன்னன் முன்னிலையில் சுவாமி மீது சாத்தப்பட்டிருந்த நாகாபரணத்தை விலக்கி காட்டிட, என்ன அதிசயம் சிவசைலநாத லிங்கத் திருமேனி சடை முடியோடு காட்சியளித்ததாம். இதனைக் கண்டு அதிசயித்த மன்னன் சிவபெருமானை போற்றி துதித்து, அர்ச்சகருக்கும் வெகுமதி வழங்கி சிறப்பு செய்தான்.
இங்குள்ள இறைவன் சிவசைலநாதர் சுயம்பு மூர்த்தி ஆவார். இவர் கருவறையில் சற்றே சாய்ந்த லிங்கத் திருமேனியாய் மேற்கு திசை நோக்கி காட்சியளிக்கிறார். இவர் அர்ச்சகரை காக்க சடைமுடியோடு காட்சியளித்ததால், இன்றும் இந்த லிங்கத் திருமேனியின் பின்புறம் சடைமுடிகளின் ரேகைகள் உள்ளன. இதனை நாம் பிரகார சுற்றுச்சுவரில் உள்ள சாளரம் வழியாக தரிசிக்கலாம் வீதி உலாவிற்கு தங்க கைக்கடிகாரம் அணிந்து வரும் அம்பிகை
திருநெல்வேலி மாநகரிலிருந்து மேற்கே சுமார் 57 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ள தேவார வைப்புத் தலம் சிவசைலம். இத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் சிவசைலநாதர். இறைவியின் திருநாமம் பரமகல்யாணி.
இத்தலத்தில் அம்பிகைக்கு தனி சன்னதி கட்ட ஏற்பாடாகி கொண்டிருந்த வேளையில், சிவசைலத்திற்கு அருகே உள்ள சிநேகபுரி (தற்போதைய ஆம்பூர்) என்னும் ஊரில் வாழ்ந்த அந்தணர் ஒருவரின் கனவில் தோன்றி அந்த ஊரில் உள்ள கிணறு ஒன்றில் அம்மையின் திருமேனி ஒன்று நான்கு கரங்களுடன் ஜலவாசமாக இருந்து வருவதாகவும், அந்த அம்பாள் திருமேனியை எடுத்து சிவசைலத்தில் கட்டப்படும் கோவிலுக்குள் பரமகல்யாணி என்ற பெயர் சூட்டி பிரதிஷ்டிக்கும் படி கூறியருள்கிறார் சிவபெருமான். அந்த அந்தணரும் தான் கண்ட கனவை ஊர் மக்களுக்கும், மன்னனுக்கும் தெரியப்படுத்தி, அந்த குறிப்பிட்ட கிணற்றில் தேடிட சிவபெருமான் கூறியது போலவே ஒரு நான்கு கரங்கள் கொண்ட அழகிய அம்மையின் திருவுருவ சிலை கிடைக்க பெற்றது. அந்த அம்மையின் திருவுருவை மங்கள வாத்தியங்கள் முழங்க அங்கிருந்து எடுத்து வந்து சிவசைலம் கோவிலில் பிரதிஷ்டை செய்ததாகவும் வரலாறு கூறுகிறது.
இங்குள்ள அம்பிகை நான்கு கரங்கள் கொண்டு அழகே உருவாக புன்முறுவல் பூத்த முகத்தவளாய் அளவில் சற்றே பெரிய உருவில் காட்சித் தருகிறாள். பாண்டிய நாட்டில் பிரசித்தி பெற்ற அநேக கோவிலின் அம்பிகைகள் இருகரம் கொண்டவர்களாக காட்சியளிக்க, இங்கு அம்பிகை பரமகல்யாணி, நான்கு கரங்கள் கொண்டு காட்சியளிப்பது சிறப்பம்சம் ஆகும். இங்குள்ள உற்சவர் பரமகல்யாணி அம்பிகையும் நான்கு கரங்கள் கொண்டு காட்சியளிக்கிறாள்.
உற்சவர் பரமகல்யாணி அம்பிகைக்கு தங்கக் கை கடிகாரம் ஆபரணமாக அணிவிக்கப்படுவது சிறப்பம்சம். விழாக் காலங்களில் இடது கரத்தில் தங்க கைக்கடிகாரத்தை ஆபரணமாக சார்த்துவார்கள்.இந்த அலங்கார நடைமுறை வேறு எந்த தவத்து அம்பிகைக்கும் செய்யப்படுவதில்லை என்பது...
Read more