பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்ட
#மதுரை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற
108 வைணவத் திவ்ய தேசங்களில்
பாண்டிய நாட்டுத் திருப்பதிகளில் ஒன்றான,
திருமால் புலஸ்திய முனிவருக்கு மோகினி அவதார கோலத்தை காட்டியருளிய இடமான
#திருமோகூர்
#காளமேகப்பெருமாள்
#மோகனவல்லிதாயார்
திருக்கோயில் வரலாறு:
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மதுரைக்கு வடக்கே 12 கிமீ தொலைவில் யா.ஒத்தக்கடை அருகே, திருமோகூர் ஊராட்சியில் அமைந்துள்ளது.
காளமேகம் என்றால் கருமையான மழையைத் தரும் மேகம் என்று பொருள். பக்தர்களின் வேண்டுகோளுக்கு தாமதிக்காமல் அருளை மழைபோல் பொழியும் பெருமாள் என்பதால் இவருக்கு அந்தப் பெயர். இங்குள்ள உற்சவருக்கு, ‘திருமோகூர் ஆப்தன்’ என்று பெயர். ஆப்தன் என்றால் நண்பன் என்று பொருள். தெய்வம் என்ற நிலையிலிருந்து நண்பனாய் நம் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து நம்மோடு வழித்துணையாய் வரும் பெருமாள் இவர் என்பதால் ஆப்தன் என்ற திருநாமத்தாலேயே அழைக்கப்படுகிறார்.
திருமோகூர் தலத்துக்கு வரலாற்றுச் சிறப்புகளும் புராணச் சிறப்புகளும் ஏராளம். இங்குதான் பெருமாள். இந்தத் தலத்தில் தேவர்களுக்கு மட்டுமல்ல, துவாபர யுகத்தில் புலஸ்திய முனிவர் தவம் இருந்து வேண்டிக்கொள்ள, அவருக்குக் கூர்ம அவதாரத்தின்போது தான் எடுத்த மோகினி அவதாரத்தைக் காட்டியருளினாராம் பகவான். எனவேதான் இந்த ஊர் மோகூர் என்ற பெயர் பெற்றது.
அமிர்தத்தை தேவர்களுக்கு அளிக்க மோகினி அவதாரம் எடுத்த தலம், புராண கால வரலாறு கொண்ட கோவில், விஸ்வகர்மா எழுப்பிய கோவில், சங்க காலத்திலும், பாண்டிய மன்னர்கள் காலத்திலும் சிறப்புற்று விளங்கிய தலம், நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம், நின்ற, கிடந்த கோலம் கொண்ட திருக்கோவில், சக்கரத்தாழ்வார் பரிபூரண சக்தியோடு அமர்ந்திருக்கும் தலம், பிரம்மன் வழிபட்டு தீர்த்தம் உண்டாக்கிய பூமி என பல்வேறு சிறப்புக்கள் கொண்டதாக, மதுரை மாவட்டத்தில் உள்ள திருமோகூர் திருத்தலம் விளங்குகிறது.
மூலவர்:
காளமேகப் பெருமாள்
தாயார்:
மோஹனவல்லித் தாயார்
உத்சவர்:
திருமோகூர் ஆப்தன்
உத்சவ தாயார்:
மோகனவல்லித் தாயார்
புஷ்கரணி:
சீராப்தி புஷ்கரணி
விமானம்:சதுர்முக விமானம்
மாவட்டம்:மதுரை
மாநிலம்:தமிழ்நாடு, இந்தியா
பாடியவர்கள்:
திருமங்கையாழ்வார், நம்மாழ்வார்
நம்மாழ்வார் மங்களாசாசனம்:
"நாமடைந்தால் நல் அரண் நமக்கென்று நல் அமரர்
தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபங் கொண்டு எழுந்தளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று என்னுமின் ஏத்துமின் நமர்கான்
(3476 திருவாய்மொழி 10-1-10)
பாற்கடலைக் கடைந்து அதன் மூலம் கிடைத்த அமிர்தத்தை பங்கிட்டுக் கொள்வதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எழுந்த சர்ச்சை பெரிதானது. தங்களுக்கு உதவுமாறு தேவர்கள் திருமாலை அழைத்தனர். (பாற்கடலில் அமிர்தம் கடையும்போது அதிலிருந்து ஒரு துளி அமிர்தம் இக்கோயிலில் உள்ள குளத்தில் விழுந்ததால், இக்கோயில் குளத்துக்கு பெரிய திருப்பாற்கடல், சிறிய திருப்பாற்கடல் என்ற பெயர் உண்டானது) அவர்களின் கோரிக்கையை ஏற்ற திருமால், மோகினி வேடத்தில் வந்தார். அப்போது அசுரர்கள் அசந்த நேரம், அமிர்தத்தை தேவர்களிடம் கொடுத்து விடுகிறார் திருமால். இதனால் தேவர்கள் அசுரர்களை ஒடுக்கி வைத்தனர்.
ஒருமுறை புலஸ்தியர் என்னும் முனிவர், திருமாலின் மோகினி அவதாரத்தை தரிசிக்க விரும்பினார். திருமாலும் அவ்வாறே அருள்பாலித்தார். அதே கோலத்துடன் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
காளமேகப் பெருமாள், மேகம் மழையைத் தருவது போல பக்தர்களுக்கு அருளைத் தருகிறார். பஞ்ச ஆயுதங்கள், மார்பில் சாளக்கிராம மாலையுடன் அருள்புரிகிறார். தன்னை வழிபடுபவர்களுக்கு உற்ற நண்பனாக இருப்பதால் உற்சவருக்கு ‘ஆப்தன்’ என்ற பெயர் உருவாயிற்று. காளமேகப்பெருமாளுக்கு கிரீடம், சங்கு, சக்கரம் ஆகியவை வெண் கற்களால் செய்து அணிவிக்கப்பட்டுள்ளது. பெருமாளுக்கு சாளக்கிராம மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
தேவர்கள் அசுரர்கள் கொடுக்கும் துன்பங்களைப் பற்றி முறையிட திருமாலை காணச் சென்றபோது திருமால் நித்திரையில் இருந்தார். (கள்ள நித்திரை – தூங்குவது போல் இருப்பது) அதனால் தங்கள் குறைகளை ஸ்ரீதேவி, பூதேவியிடம் கூறிவிட்டு வந்தனர். உடனே திருமால் மோகினி வடிவம் எடுத்து அவர்களைக் காத்தார். இதனால் இத்தல பெருமாளுக்கு ‘பிரார்த்தனை சயனப் பெருமாள்’ என்று பெயர் விளங்கிற்று.இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் மோட்சம் கிடைக்கும் என்பதால் பெருமாள் ‘மோட்சம் தரும் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். பெருமாள் பெண் வடிவம் எடுத்த தலம் என்பதால், தாயாருக்கு என்று விழா எதுவும் கிடையாது. நவராத்திரியில் விசேஷ பூஜை உண்டு. பங்குனி உத்திரம் அன்றுமட்டும் சுவாமி, தாயார் சந்நிதிக்குச் சென்று சேர்த்தி சேவை தருகிறார். இந்த வைபவம் மூன்று மணி நேரம் மட்டுமே நடைபெறும். இவரைப் ‘படி தாண்ட