மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மூவரைவென்றான் கிராமம் லிங்ககிரி மலையில் அமைந்திருக்கிறது, குடவரை கோவில்.
இங்கு மலைக்கொழுந்தீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், பல்லவர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என வரலாறு கூறுகிறது.
இக்கோவிலில் சித்திரை 1-ந்தேதி திருவிழா நடைபெறும். திருவிழாவின் போது சப்பரத்தில் சாமியும் அம்பாளும் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். பிரதோஷ தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். சனி பிரதோஷம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
பவுர்ணமி தினங்களில் கிரிவலம் நடைபெறும். இந்த கோவிலின் நடை தினமும் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 2 மணிக்கு சாத்தப்படுகிறது. பின்னர் மாலை 4 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும். பள்ளியறை பூஜையுடன் மாலை 6 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
தமிழரின் கட்டிடக்கலையை மலைகொழுந்தீஸ்வரர் கோவிலில் காணலாம். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது.
பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்கும் இந்த தலமானது, மதுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மலை மீது எழிலுற காட்சி தரும் இந்தக் கோவிலில் மூலவராக மலைகொழுந்தீஸ்வரர் அருளாட்சி செய்கிறார். இறைவியின் திருநாமம் மரகதவள்ளி என்பதாகும்.
இக்கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது என்பதை அறியும் விதமாக கல்வெட்டுகளும், பல்லவர்களின் சின்னமான சிங்கமும் கோவில் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளன. கோவிலில் அமைந்திருக்கும் லிங்ககிரி மலையை ‘மொட்டை மலை’ என்றும் அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். மலையின் மீது பாறையை குடைந்து, 26 அடி நீளமும், 20 அடி அகலத்திலும் இந்தக் கோவிலை வடிவமைத்து இருக்கிறார்கள்.
தொழில் விருத்தி, குழந்தை பாக்கியம் வேண்டியும், கடன்தொல்லை தீரவும், வேலை கிடைக்கவும் மலை கொழுந் தீஸ் வரரை வணங்கிச்சென்றால் எல்லாம் ஜெயமே. தற்போது மலை கொழுந்தீஸ்வரர் சன்னிதி அருகே நவக்கிரகங்கள் மற்றும் பைரவர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மரகதவள்ளி அம்பாள், குடவரை கோவிலுக்குள் இல்லாமல் தனியாக மண்டபத்தில் இருந்து...
Read moreமதுரையிலிருந்து திருவில்லிப்புத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் அழகாபுரிக்கு அருகில் மேற்கு நோக்கிப் பிரியும் பாதையில் ஏறத்தாழ நான்கு கிலோமீட்டர் பயணித்தால் மூவரைவென்றான் என்னும் சிற்றூரை அடையலாம். ஊரின் புறத்தே உள்ள குன்றின் நடுப்பகுதியில் கிழக்கு நோக்கிய குடைவரையொன்றும் பிற்காலத் திருப்பணிகளாய் அம்மன் திருமுன், பெருமண்டபம், மடைப்பள்ளி இவையும் உள்ளன.
குடைவரைக்கு முன்னால் ஒரு மண்டபமும் அதற்கு முன்னால் சிறிய அளவிலான நந்திமண்டபமும் காணப்படுகின்றன. கருவறையை நோக்கி நந்தி அமர்ந்துள்ள இம்மண்டபத்தை அடைய மலைத்தளத்திலிருந்து படிகள் உள்ளன. நந்திமண்டபத் தளத்தின் தென்முகப்பிலும் அதன் மேற்கிலுள்ள மண்டப முகப்புச் சுவரின் இருபுறத்திலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
குடைவரையின் முன்னும் நந்திமண்டபத்தின் பின்னுமாய் அமைந்திருக்கும் மண்டபத்தை முன்மண்டபமாகக் கொள்ளலாம். அதன் முகப்புச் சுவர் நடுவே வாயில் காட்டப்பட்டுள்ளது. வாயிலின் வலப்புறம் உள்ள சுவர்ப்பகுதியில் பிள்ளையார் சிற்பம் உள்ளது. உட்புறத்தே இம்மண்டபம் குடைவரையோடு பக்கங்களிலும் மேலும் கீழுமாய்ப் பொருந்த இணைக்கப்பட்டுள்ளது. குடைவரை முகப்பு முழுத்தூண்களுக்கு முன்னால் இரண்டு தூண்கள் எழுப்பி அவற்றின் மேல் உத்திரம் நிறுத்தி, மண்டப முன்சுவருக்கும் இதற்கும் இடையில் கற்கள் பாவிக் கூரையாக்கியிருக்கிறார்கள். இத்தூண்கள் பின்புறத்தில் நான்முகத் தூண்களாகவும் முன்புறத்தே சதுரம், முப்பட்டை, சதுரம் என்ற அமைப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளன.
Reference :
தென்மாவட்டக்...
Read moreVery nice and calm place to enjoy your picnic and pilgrimage at the same time..temple is located in the centre of the hill.. but the transport (bus) facilities are minimal to this exact location..and it's better to take your food and water since there is no hotels nearby that's the only drawback ... divine...
Read more