G Umashankar அவர்களின் பதிவு
அன்புடையீர். இன்று மதியம் திருப்பூர் பல்லடம் ரோட்டில் லட்சுமி கல்யாண மண்டபம் எதிரில் உள்ள ஸ்ரீ கௌரி கிருஷ்ணா உணவகத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வு குறித்த பதிவு. கொஞ்சம் கவனமாக படியுங்கள். ஒரு விருந்தினருடன் மதிய உணவிற்கு அவரது விருப்பத்திற்கு ஏற்ப சென்றோம். அவரிடம் முதலில் அங்கே வேண்டாம் அது ரௌடிகளின் ராஜ்ஜியம் ஆக மாறிவிட்டது என்று சொன்னேன் , அவர் கேட்கவில்லை. சம்பவம் 1: இரண்டு டோக்கன் வாங்கினோம். ஒன்று மட்டும் தான் தந்தார்கள் கேட்டதற்கு நீங்கள் சென்று அமருங்கள் நாங்கள் சொல்லிக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். சம்பவம் 2 :சாப்பிட அமர்ந்த போது டோக்கன் கேட்டனர் ஒன்று மட்டும் கொடுத்தோம். இன்னொன்று எங்கே என்று கேட்ட பொழுது கல்லாவில் இருப்பவர் சொல்வதாக சொன்னோம். அதற்கு அவர் அவன் ஏதாவது சொல்லுவான் யார் பதில் சொல்வது என்று முனங்கிக் கொண்டே சென்றார். சம்பவம் 3: உணவு பரிமாறப்பட்டது. ஊறுகாயை நடு இலையில் வைத்தனர். ஓரமாக வைக்க சொன்னதற்கு கோபமாக ஏதோ முனங்கிக் கொண்டே சென்றார். சம்பவம் 4:சாம்பார் மற்றும் வத்தல் குழம்பில் காய் அல்லது வெங்காயம் என்று ஒன்று கூட இல்லை என்று கேட்டதற்கு இதுதான் இருக்கிறது என்று ஏளனமான பதில். சம்பவம் 5: கிட்டதட்ட 5 முறை தயிர் கேட்டோம்..வழங்கவில்லை. தனியாக டோக்கன் வாங்க வேண்டுமா என்று கேட்டோம் தேவையில்லை என்று சொன்னார்கள். அருகில் வந்தவர் எங்களுக்கு மட்டும் பரிமாறாமல் போய் விட்டார்.ஏன் என்று கேட்டதற்கு வரிசையில் தான் வரும் இஷ்டம் இருந்தால் இருங்கள் இல்லை என்றால் எங்களுக்கு கவலை இல்லை. பணம் கொடுத்து தானே சாப்பிடுகிறோம் இப்படி பேசினால் என்ன என்று கேட்டதற்கு இஷ்டம் இருந்தால் சாப்பிடுங்கள் எங்கள் சௌகரியத்திற்குத்தான் பரிமாறுவோம் என்று எடுத்தெறிந்து பேசினார் கள்.உடனே உரிமையாளரை கூப்பிடுங்கள் என்று சொன்னதற்கு அவர் இல்லை வரமாட்டார் என்று கூறினார். நான் கோபமாக எழுந்து உரிமையாளருக்கு உடனே போன் செய்து நடந்ததை சொன்னேன். மாடியில் இருந்தவர் கீழே இறங்கி வந்தார். நடந்ததை மறுபடியும் அவரிடம் கூறினேன். அவரோ தவறு நடந்து இருக்கலாம் நீங்கள் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என்றார். நான் பட்ட அவமானம் போதும் இனி இந்த கடை வாசலை மிதிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன். உரிமையாளர் என் மீது வைக்கும் குற்றச்சாட்டு என்ன என்றால் நான் அவர் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க வில்லையாம்.போனிலும் நேரிலும் நடந்ததை கூறினேன் ஒரு வார்த்தை கூட தன்னுடைய பணியாளரை கூப்பிட்டு என்ன நடந்தது என்று கேட்க விரும்பாதரிடம் பேச என்ன இருக்கிறது. இது நடந்து முடிந்த பிறகு என் நண்பர்கள் சிலரிடம் நடந்ததை கூறினேன் அவர்கள் உன்னை யார் அங்கே போகச் சொன்னது ஊரில் வேறு கடையே இல்லையா என்று கேட்டனர். பிறகு தான் தெரிந்தது இது ஒரு தொடர் நிகழ்வு என்று. முன்னதாக நாங்கள் ஒரு மேசையை நோக்கி அமர சென்ற பொழுது அங்கே அமர அனுமதி இல்லை என்றனர். ஆனால் எங்கள் பின்னால் வந்தவர்களை நாங்கள் சென்று அமர இருந்த இடத்தில் அமரச் சொன்னார்கள்.அவர்களுக்கு வேகமாக உணவை பரிமாறினர். எதற்கு எடுத்தாலும் வரிசையில் வரும் என்று கூறுபவர்கள் அனைவரையும் வரிசையாக அமர சொல்ல வேண்டியது தானே. இறுதியாக அங்கே சென்றது முதல் தவறு. தவறை தட்டிக் கேட்காத நிர்வாகத்திடம் தவறை சுட்டிக் காட்டி யது இரண்டாவது தவறு.இனிமேல் அங்கே சென்றால் அதை விட கேவலம் ஒன்றும் இல்லை. காசை கொட்டி கொடுத்து தன்மானத்தை, சுயமரியாதையை,சுயகௌரத்தை இழந்து உணவு உண்ண வேண்டிய அவசியமில்லை. உணவை விட மானமும் மரியாதையும் முக்கியம்.வேண்டாம்...
Read moreDestination : From Palladam it's on right and from Tiruppur it's on left.
Car and 2 wheeler parking available here.
Food quality is very good. Brakefast Lunch and Dinner menu were good as of my own experience in this hotel.
Those who plan for small functions like birthday and small marriage reception etc.....
A decent and good place for family too...
Here we can pay by cash and other payments too.
Function hall is good enough for marriage reception and the rental for hall is very reasonable and affordable. Even we get parking area behind for function purposes.
Person alloted for car parking in front of hotel is an idiot and don't even know how to speak with customers. So my request to the manager is allot a Tamil person for this work. This guy is useless. I was entirely...
Read moreGowri Krishna has been our go-to place whenever we wanted to have good vegetarian food. The food items are at an affordable price with good taste. The ambience is good as well. We usually sit on the first floor AC Room which is good. We have been visiting this restaurant for years and the quality has been constant. Their snacks are also equally good. Parking is available. My recommendations to try here would be Onion Rava Roast, Mushroom 65, Appam Thenga Paal, Paneer 65, Ghee Roast(must try), Ghee Podi Roast etc., If you wanna have some good sambar, visit here. Don't go with high hopes. Just be blank and order foods. You...
Read more