அருள்மிகு இளங்கிளி அம்மை சமேத ஆட்சீஸ்வரர் திருக்கோயில், அச்சிறுபாக்கம்- 603 301. காஞ்சிபுரம் மாவட்டம்.
தல சிறப்பு: ஆட்சிபுரீஸ்வரர், உமைஆட்சீஸ்வரர் என இரண்டு மூலவர்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள்.இளங்கிளிஅம்மை, உமையாம்பிகை என இரண்டு அம்மன்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள். இத்தல சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் . திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்தை திருநாவுக்கரசர் தனது க்ஷேத்திரக் கோவையில் குறிப்பிட்டிருக்கிறார். அகத்தியருக்கு இத்தலத்திலும் சிவன் தனது கயிலாய திருமணக் காட்சியை காட்டியருளியுள்ளார். சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் அவருக்கு துவார பாலகர்களாக இருக்கின்றனர். உமையாட்சீஸ்வரருக்கு முன்னே தியானநந்தி இருக்கிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 262 வது தேவாரத்தலம் ஆகும்.
பொது தகவல்: சிவனின் பிறபெயர்கள்அச்சேஸ்வரர், அச்சுகொண்டருளிய தேவர் என்பதாகும். தலவிநாயகர்: அச்சுமுறி விநாயகர் ராஜகோபுரம்: ஐந்து நிலை பிரகாரத்தில் சீனிவாசர், அலமேலு மங்கைத்தாயார் தனிச்சன்னதியில் இருக்கின்றனர்.
பிரார்த்தனை: ஆட்சிபுரீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டால் ஆட்சி செய்யும் வாய்ப்பு, ஆளுமைத் திறன், பதவி உயர்வு கிடைக்கும் என்பதும், சுவாமி அட்சரம் எனும் எழுத்தின் வடிவமாக இருப்பதால் கல்வி, கேள்விகளில் சிறக்கலாம் என்பதும் நம்பிக்கை. இங்கு அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதில் கலந்துகொண்டால் தோஷங்கள், ஜென்ம வினைகள், தொழில் தடைகள், மனக்குழப்பங்கள் நீங்கும் என நம்புகின்றனர்.
தல வரலாறு:பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன், கமலாட்சன், வித்வன்மாலி ஆகிய திரிபுர (மூன்று) அசுரர்கள் சேர்ந்துகொண்டு தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தனர். அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள், அவர்களை அழித்து தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர்.
தேவர்களுக்கு இரங்கிய சிவன், வானுலகு மற்றும் பாதாள உலகை இணைத்து தேராக்கி அதில் ஏறி அசுரர்களை அழிக்கச் சென்றார். எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு அல்லது மனதில் நினைத்துவிட்டோதான் செல்ல வேண்டும் என்பது நியதி. சிவனுக்கும் இந்த நியதி பொருந்தும். ஆனால் அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற வேகத்தில் விநாயகரை நினைக்காமல் சென்றார் சிவன். அவருடன் சென்ற தேவர்களோ சிவனே நம்முடன் இருக்கும்போது வேறென்ன துணை வேண்டும்? என்ற எண்ணத்தில் அவரை வணங்காமல் சென்றனர்.
கோபம் கொண்ட விநாயகர், தேரின் அச்சை முறித்து சிவனை செல்லவிடாமல் தடுத்து விட்டார். தேர் அங்கேயே நின்றது. இது விநாயகரின் செயல்தான் என உணர்ந்த சிவன், அவரை மனதில் நினைத்து செல்லும் செயல் சிறப்பாய் நடந்திட காவலனாய் இருக்கும்படி வேண்டினார்.
தந்தை சொல்கேட்ட விநாயகர் தேர் அச்சை சரியாக்கினார். பின் சிவன் திரிபுர அசுரர்களை அழித்தார். தேர் அச்சு இற்று (முறிந்து) நின்ற இடமென்பதால் இத்தலம் "அச்சு இறு பாகம்' என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் "அச்சிறுப்பாக்கம்' என்றானது. சிவன் "அட்சீஸ்வரர்' என்றும், "ஆட்சிபுரீஸ்வரர்' என்றும்...
Read moreஶ்ரீ சுந்தர நாயகி சமேத ஶ்ரீ ஆட்சீஸ்வரர் ஆலயம். அச்சரபாக்கம். ( அச்சிறுபாக்கம்) தொண்டை நாட்டு பாடல் பெற்ற தலங்களில் 29 வது தலம்.
சென்னை - திருச்சி சாலையில் அச்சரபாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 KM. இரயில் நிலையம் 2.3 KM.
கௌதம முனிவர், கண்வ முனிவர், சம்பந்தர், அப்பர், சேக்கிழார் வழிபட்ட தலம்.
திரிபுராதி அசுரர்கள் ( திரிபுர சம்ஹாரம் நடந்த தலம் திருவதிகை .) வதம் செய்து திரிபுரம் எரிக்க சிவபெருமானுக்கு, தேவர்கள் தேராக உருக்கொண்டு, மித மிஞ்சிய கர்வத்துடன் ஈஸ்வரன் தங்கள் உதவியால் சம்ஹாரம் செய்வார் என எண்ணினர். ஈஸ்வரன் இத்தலத்தில் தேரின் மேல் தன் பாதத்தை வைத்த உடன் தேரின் அச்சு முறிந்து தேவர் கர்வம் அடங்கியது. தேவர் விக்னம் தீர்க்கும் விநாயகரை வழிபட அவர் அருளால் தேர் சீரானது. ( அச்சிறுபாக்கம்)
இவ்வழியே சென்ற ஒரு பாண்டிய மன்னன் கா ட்டு முல்லைக் கொடிகள் சூழ்ந்த காட்டில் தங்க நிறம் கொண்ட உடும்பை கண்டு துரத்தி செல்ல , உடும்பு சரக்கொன்றை மரத்தில் உள் ஓர் பொந்தில் மறைந்தது. அரசனின் படை வீரர்கள் மரத்தை வெட்ட ரத்தம் சொட்ட ஓர் சிவலிங்கம் வெளிப்பட்டது. மன்னன் திரிநேத்ரதாரி என்ற எல்முனிவரிடம் செல்வம் அளித்து ஓர் சிவாலயம் எழுப்ப சொல்ல, முனிவர் இரு கருவறைகள் கொண்ட ஆலயம் அமைத்தார்.
மன்னனிடம் உம்மை ஆட்கொண்டவர் உமை ஆட்சீஸ்வரர், எமை ஆட்கொண்டவர் ஆட்சீஸ்வரர் என்று கூறி சென்றார் .
ஆலயத்தின் எதிரில் தீர்த்தம், விநாயகர் சன்னதி. ராஜ கோபுரம் உள்ளே நுழைந்து பலி பீடம், த்வஜ ஸ்தம்பம், நந்தி மண்டபம், தெற்கு நோக்கிய அம்பாள் சன்னதி.
வெளி பிரகாரத்தில் சப்த மங்கையர், விநாயகர், சரக்கொன்றை மரத்தடியில் நந்திதேவர் உடன் அம்பாள், லிங்க உருவில் ஈசன், அருகில் வணங்கிய கோலத்தில் திரிநேத்ரதாரி முனிவர் என சன்னதி, மற்றும் சுதை வடிவில் அமர்ந்த அழகான திருக்கோலத்தில் ஈஸ்வரன், அம்பாள் என வழிபடலாம்.
ஆலயம் உள்ளே சுயம்புவான மூலவர் சிறிய பானம் , தாழ அமைந்த சதுர ஆவுடையார் என தரிசனம்.
உமை ஆட்சீஸ்வரர் சன்னதி பிரகாரத்தில் உள்ளது. ஆவுடையாருடன் சற்றே பெரிய பானத்துடன் லிங்க உருவில் ஈஸ்வரன், பின்புறத்தில் அமர்ந்த நிலையில் அம்பாளுடன் ஈஸ்வரன் தரிசனம் செய்யலாம். கோஷ்ட தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சன்னதியில் தேவியருடன் சுப்ரமணியர் சண்டிகேஸ்வரர்.
அம்பாள் சன்னதி சுவர் வெளிப்புறத்தில் அழகுற சுதை சிற்பங்களாக ஶ்ரீ கருமாரியம்மன், ஶ்ரீ அன்னபூரணி, ஶ்ரீ சமயபுரம் மாரியம்மன், ஶ்ரீ கன்னியாகுமரி பகவதி, ஶ்ரீ காசி விசாலாக்ஷி, ஶ்ரீ மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி, ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி, ஶ்ரீ பாலா திரிபுரசுந்தரி, ஶ்ரீ சண்டிகா பரமேஸ்வரி, ஶ்ரீ பிரத்தியங்கரா தேவி, ஶ்ரீ காயத்ரி தேவி தரிசிக்கலாம்.
“பொன்றிரண் டன்ன புரிசடை புரளப் பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக் குன்றிரண் டன்ன தோளுடை யகலங் குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர் மின்திரண் டன்ன நுண்ணிடை அரிவை மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி அன்றிரண் டுருவம் ஆயஎம் அடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.” என தொடங்கி 11 பாடல்கள் சம்பந்தர் இத்தலத்தில்...
Read moreBeautiful Temple with the Traditional history in behind it about Lord Shiva and Parvati. The Main deity is "Suyambu" (naturally appeared) Moorthy named "Aatcheeshwarar" and Goddess is in separate Sanctum in standing pose and her sanctum is surrounded with varieties of Amman Incarnations. Really felt very blessed when visited here. Lord Vishnu and Lakshmi Devi also here inside this temple. Flower shops and car parking facility are also available at the entrance of the temple. Another Shiv deity famous here is "Umai Aatcheeshwar" (Lord Shiva is in marriage pose). Simma Theertham and Beautiful trees are surrounded here. Very historic and everyone must visit once...
Read more