குழந்தைப்பேறு, திருமணத் தடை விலகும் முக்கிய தலமாகும். இந்த கோவில் தல விருட்சம் நாகலிங்க மரமாகும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தா்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றுள்ள கோவிலாக பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் உள்ளது. திருமணத்தடை நீக்கி குழந்தை பேறு அளிக்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலை பக்தர்கள் நல்வாழ்வு அருளும் நாடியம்மனாக மனதில் வைத்து வழிபட்டு வருகிறாா்கள். காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களின் இஷ்ட தெய்வமாக விளங்கி வரும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறாா்கள். தற்போது நாடியம்மாள்புரம் என்று அழைக்கப்படும் இத்தலம் முற் காலத்தில் பெரிய வனமாக விளங்கியது. அக்காட்டிலே தஞ்சையை ஆண்ட மன்னர் வேட்டையாடுவதற்காக வந்தார். மன்னரும் மந்திரியும் வேட்டையாடிக்கொண்டிருந்தபோது ஒரு மான் துள்ளிக் குதித்து ஓடி புதருக்குள் சென்று மறைந்தது. அப்போது வேடர்கள் சிலர் முயலை துரத்திச்சென்று புதரை வெட்ட அந்த புதரில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதனால் பதற்றமடைந்த வேடர்கள் புதரை விலக்கி பார்த்தபோது அந்த புதருக்குள் அம்பாள் சிலை ஒன்று இருந்தது. இதைக்கண்டு அதிா்ச்சி அடைந்த வேடர்கள் அம்மன் சிலையின் நெற்றியில் காயம் பட்டு அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியதை கண்டு மயக்கம் அடைந்தனர். உடனே அங்கு சென்று நடந்த விவரங்களை கேட்டறிந்த மன்னர், அம்பாளுக்கு அதே இடத்தில் கோவில் கட்ட உத்தரவிட்டு மானியமாக நிலங்களையும் வழங்கினார். ஐம்பொன் சிலை அக்காலத்தில் வீரமாநகர் என்ற பட்டுக்கோட்டையில் சிறந்த பக்திமானாகவும், செல்வந்தராகவும் விளங்கிய சின்னான் என்பவரிடம் அம்பாளுக்கு கோவில் கட்டும் பொறுப்பை அரசர் ஒப்படைத்தார். நாடியம்பாளுக்கு கோவில் கட்டி நடராஜர் என்பவர் பூஜை நடத்த சின்னான், நாடியம்பாளை குலதெய்வமாகக் கொண்டு வணங்கி வழிபட்டு வந்தார். நாடியம்மனுக்கு அவர் ஐம்பொன் சிலை வார்த்து ஆராதித்தார். மேலும் இந்த கோவிலில் தீர்த்தக்குளம் உருவாக்கப்பட்டது. சுற்றுப்புறப் பகுதியிலும் நாடிமுத்து, நாடியான், நாடியம்மை என்று குழந்தைகளுக்கு பெயர் வைப்பது அதிகம் உண்டு. நாடியம்மன் கோவில் சில காலம் பரம்பரை அறங்காவலர்களின் பொறுப்பில் இருந்து தற்போது அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. நாயக்க மன்னர்கள் முற்காலத்தில் அடர்ந்த வனமாக விளங்கிய பட்டுக்கோட்டை தற்போது நாடியம்மன் அருளால் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி அடைந்து இன்று ஒரு பெரிய நகரமாக விளங்குகிறது. பட்டுக்கோட்டை நாடியம்மனை தேடி வரும் பக்தர்கள் கோடி நன்மை பெறுவார்கள் என்பது சான்றோர் வாக்கு. 1676-ம் ஆண்டுக்கு முன்பு பட்டுக்கோட்டையை நாயக்கர் மன்னர்கள் ஆண்டு வந்தனர். பட்டுக்கோட்டையை ஆண்ட நாயக்கர்களில் ஒருவர் பாளையக்காரரான பட்டு மழவராய நாயக்கர். இவர் பெயரால்தான் பட்டு மழவராயன் கோட்டை என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி பின்னாளில் பட்டுக்கோட்டை என பெயர் பெற்றது. இங்கு சோழர் காலத்தில் சிவன் கோவிலும், பெருமாள் கோவிலும் கட்டப்பட்டன. பின்னர் வந்த நாயக்கர் காலத்தில் தான் நாடியம்மன் புகழ் பரவ தொடங்கியது என கூறப்படுகிறது. நாயக்க மன்னர்களில் ஒருவரான ராமப்ப நாயக்கர், இந்த கோவிலின் கருவறை கட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பழைய கோவிலில் முன் மண்டப அமைப்பு முற்றிலும் நாயக்கர் கலைப் பாணியை தழுவி உள்ளது. முற்காலத்தில் வளைவான செங்கற்கள் சுண்ணாம்பு கொண்டு வலிமையாக கோவில் கட்டப்பட்டிருந்தது. இன்று இக்கோவில் முழுமையாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளதால் பழைய சின்னங்கள் அழிந்து விட்டன. குழந்தை பேறு அருளும் கோவில் மாலிக்காபூர் படையெடுப்பின்போது பட்டுக்கோட்டை தாக்கப்பட்டு சிவன், பெருமாள் கோவில்களும் சேதம் அடைந்தன. நாடியம்மன் உற்சவர் சிலை மறைக்கப்பட்டு மராட்டியர் ஆட்சிக்கு வந்த பிறகு இச்சிலை செட்டித்தெரு கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. பட்டுக்கோட்டை நகரின் குலதெய்வமாக விளங்கும் நாடியம்மன், வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும் தெய்வமாகும். குழந்தைப்பேறு, திருமணத் தடை விலகும் முக்கிய தலமாகும். இந்த கோவில் தல விருட்சம்...
Read moreVery divine temple and daily poojas are done. There is open space at the entrance for parking, annadham for lunch happens daily. No hotels or tea shop nearby, need to go...
Read moreSuper. A famous and popular AMMAM temple @ 1 km South from PATTUKKOTTAI NEW BUS STATION. a small beautiful temple with lotus flower water tank and beautiful...
Read more