பத்ரகாளியம்மன் திருக்கோவில் - சிவகாசி
பத்ரகாளியம்மன் விரும்பி திருக்கோவில் கொண்ட சில தலங்களில் முதன்மையானது, சிவகாசி பத்ரகாளியம்மன் திருக்கோவில். கருவறையில் பத்ரகாளியம்மன் எட்டு திருக் கரங்களுடன் உடுக்கை, கட்கம், கபாலம், சூலம், ஹஸ்தம், நாகம், மணி, கிண்ணத்துடன் அருள்பாலிக்கிறாள். கருவறையில் வீற்றிருக்கும் இந்த அன்னை, வலது திருப்பாதத்தை தூக்கி குத்துக்காலிட்டு, தனது இடது திருப்பாதத்தை அரக்கனின் தலைமேல் வைத்த வண்ணம் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
ஆலய கருவறை வெளி மற்றும் உள் பிரகாரத்தில் கன்னி விநாயகர், பைரவர், வீரபத்திரர், மாடசுவாமி, வெயிலுகந்த அம்மன், இருளப்ப சுவாமி, கருப்ப சுவாமி, பேச்சியம்மன் சன்னிதிகள் உள்ளன. பத்ரகாளியம்மனின் சகோதரி பேச்சியம்மனுக்கு பஞ்சமி நாட்களில் நெய் தீபம் ஏற்றி, தொடர்ந்து 11 பஞ்சமி நாட்களில் சிவப்பு அரளி மலர்களால் அர்ச்சித்து வர குழந்தைகள், பெரியவர்களுக்கு சொல்வாக்கும், செல்வாக்கும் கிடைக்கும்.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் பத்ரகாளியம்மனிடம் தொட்டில் பிரார்த்தனை வேண்டிக்கொண்டு, அவளது கருவறை தீபத்தில் நல் லெண்ணெய் சேர்த்து வழிபட்டு வர, உடனே குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இத்தல ஆலயத்தின் உள்ளே பத்ரகாளி அம்மனின் எதிரே உள்ள நந்தவனத்துக்குள், ஆதி பத்ரகாளி பீடம் உள்ளது. முதன் முதலில் இத்தல பத்ரகாளி அம்மன் அமர்ந்த ஆதி பீடம் இதுவாகும். இந்த நந்தவனத்திற்குள் ஆண் களுக்கு மட்டுமே அனுமதி. பெண்களுக்கு அனுமதி இல்லையாம். உடல் உறுப்புகள் நலம் அடையும் பொருட்டு பத்ரகாளியம்மனிடம் வேண்டிக்கொண்ட பக்தர்கள், அவள் அருளால் நலம் பெற்றதும் மண், வெள்ளியால் ஆன கை, கால் போன்ற உடல் உறுப்புகளையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். வீடு வாங்குவதற்கு, மண்ணில் செய்த வீடு போன்ற உருவத்தை இங்கு அம்பாளுக்கு சமர்ப்பிக்கிறார்கள். கார் வாங்க நினைப்பவர்கள், கார் போன்ற பொம்மையை வாங்கி அன்னைக்கு சமர்ப்பிக் கிறார்கள்.
இங்கு சித்திரையில் நடைபெறும் பெருவிழா பிரசித்திப் பெற்றது. இந்த விழாவின் போது, கயர்குத்து திருவிழா, பொங்கல் விழா, தேரோட்டம் போன்றவை நடைபெறும். கயர்குத்து என்பது உடம்பில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி அன்னையை வழிபடுவது ஆகும். உடல் நோய், கண் திருஷ்டி அகல இந்த நேர்ச்சையை செய்கிறார்கள். கூடவே தங்கள் இடுப்பு பகுதியின் அருகில் ஊசியால் குத்தி நூலை நுழைத்து கட்டி (இப்படி இடுப்பின் இருபுறமும்), பின்பு அந்த நூலை பத்ரகாளி முன்னிலையில் அவிழ்த்து கயர்குத்தினை நிறைவு செய்வார்களாம். இதன் மூலம் தங்கள் உடம்பில் அண்டிய நோய்கள் அனைத்தும் படிப்படியாக குறைந்து நலம்...
Read moreA awesome place where u can see the god with ease. The tempke is one of the oldest but newly renovated. The goddess bhadrakali amman is the main godess here. It also has a 5 headed ganesha, 7 other amman godesses, Ayyapan, Hanuman, and a big pond full of fishes. You can feed the fishes with puffed rice. Also there is a sugarcane juice shop at the entrace. I have been visiting the temple for the past 5 years. It gives you peace of mind. A must visit...
Read moreசிவகாசி நகரின் மத்தியப்பகுதியில் அமைந்துள்ள பழமையும், பிரசித்தியும் பெற்ற இந்த ஆலயத்தில், தங்கத்தகடுகளால் வேயப்பட்ட விமானக்கருவறையின் கீழ் உடுக்கை, கட்கம், கபாலம், சூலம், ஹஸ்தம், நாகம், மணி, கிண்ணம் கொண்டு எட்டு திருக்கரங்களுடனும், ஒய்யாரமாக தனது வலது திருப்பாதத்தை தூக்கி குத்துக்காலிட்டு, இடது திருப்பாதத்தை அரக்கனின் தலைமேல் வைத்தவண்ணம் அமர்ந்த திருக்கோலத்தில் வீற்றிருக்கிறாள் நம் பார்வதித்தாயின் உக்கிர அவதாரமான பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் குலதெய்வமாக போற்றப்படும் இத்தல நாயகி அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளியம்மன். ஒரு புராண நிகழ்வின்படி; ஈசனின் கோபத்திலிருந்து தோன்றிய வீரபத்திரரும், ஈஸ்வரியம்பிகையின் கோபத்திலிருந்து தோன்றிய பத்திரகாளியும் நம் ஈசனின் கட்டளைப்படி உலக மக்களின் நல்வாழ்வுக்காக, இப்பூவுலகில் ஆங்காங்கே திருக்கோயில் கொண்டனராம். அப்படி பத்திரகாளியம்மன் திருக்கோவில் கொண்ட சில தலங்களில் முதன்மையானதாக இத்தலம் கூறப்படுகிறது. இக்கோயிலின் பிரமாண்ட ஏழு நிலை ராஜகோபுரமானது முன்புறத்தில் 66 அடி (20-மீட்டர்) அகலமும், பக்கவாட்டில் 44 அடி (13-மீட்டர்) அகலமும், 110-அடி (34-மீட்டர்) உயரமும் கொண்டதாகும். சுபகாரிய தடைகள் மற்றும் கண் திருஷ்டிகள் போக்கும் இந்த அன்னையை, பவுர்ணமி (அன்று நாள் முழுவதும் ஆலயம் திறந்திருக்கிறது), செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை நாட்களில் அந்திசாயும் பொழுதில், அம்மனின் கருவறை தீபத்தில் நல்லெண்ணெய் சேர்த்து எட்டு உதர எழுமிச்சை பழம் தீபம் ஏற்றி அவள் திருப்பாதத்தில் வைத்து வழிபடுவது நன்மை பயக்கும்...
Read more