அருள்மிகு முத்தால பரமேஸ்வரியம்மன் திருக்கோயில், பரமக்குடி, இராமநாதபுரம் 🕉️ வைகை நதியின் தென்கரையில் அமைந்த கோயில் இது. ⚛️ மூலஸ்தானத்தில் முத்தால பரமேஸ்வரியம்மன் சாந்த சொரூபமாக தாமரை 🌷 பீடத்தில் அமர்ந்திருக்கிறாள். எதிரே சிம்ம வாகனம் இருக்கிறது.
குழந்தைகள்👶 புத்திசாலித்தனத்துடன் இருக்க இவளுக்கு பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
நான்கு கரங்களில் சூலம் 🔱 ♈ கபாலம் கட்கம்,⚜️ டமருகம் 🔅 ஆகிய ஆயுதங்கள் வைத்திருக்கிறாள். எதிரே சிம்ம வாகனம் இருக்கிறது. மதி நுட்பம் பெருகவும், அறிவார்ந்த செயல்களில் புலமை ஏற்படவும் இவளுக்கு விசேஷ அபிஷேகம் செய்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.
வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. பங்குனியில் பிரம்மோற்ஸவ விழா நடைபெறும்.
🌼பூச்சொரிதல் சிறப்பு: 🏵️
அம்பிகை இங்கு உக்கிரமாக இருப்பதால், மாசி, பங்குனியில் பூச்சொரிதல் விழா நடக்கிறது. 🌻 அப்போது பக்தர்கள் அம்பிகைக்கு, விதவிதமாக 💐மலர் கொடுக்கின்றனர். அதை வைத்து அம்பிகையின் முகம் மட்டும் தெரியும்படியாக, சன்னதி💮 முழுக்க🏵️ பூக்களால் அலங்காரம் செய்கின்றனர். 🌸இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது. 🥀
இங்கிருந்து சற்று தூரத்தில் சிவன் கோயில் ஒன்றுள்ளது. பக்தர் ஒருவருக்காக தானே எழுந்தருளியவர் இவர். இவரது பெயரால் ஊர் பரமக்குடி (பரமன் குடிகொண்ட ஊர்) என்றழைக்கப்படுகிறது. விஜயதசமியன்று இந்த சிவன், இக்கோயிலுக்கு எழுந்தருளுகிறார். ⚛️ அம்பிகைக்கு பால்குடம்: 🍶 முருகன் கோயில்களில் பக்தர்கள், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
ஆனால், அம்பாள் தலமான இங்கு பங்குனி பிரம்மோற்ஸவத்தின்போது பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்று இவள், சிவனுக்குரிய ரிஷப வாகனத்தில் புறப்பாடாவது மற்றொரு சிறப்பு.
🔯சிறப்பம்சங்கள்:🔯
★ அம்பாள் தலமான இங்கு பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்று இவள், சிவனுக்குரிய ரிஷப வாகனத்தில் புறப்பாடாவது...
Read moreசோழர்களால் கட்டப்பட்டு, பாண்டியர் மற்றும் நாயக்கர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட இந்த பழமைமிகு திருத்தலத்தின் கருவறையில், சூலம், கபாலம், கட்கம், டமருகம் என, நான்கு திருக்கரங்ளிலும் ஆயுதங்கள் ஏந்திய ஶ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மன், தாமரை பீடத்தில் சாந்த சொரூபிணியாய் அமர்ந்த திருக்கோலத்தில் அழகு அருட்காட்சியளிக்கிறாள்.
வைகை ஆற்றங்கரையோர ஆலயத்தில் அருட்குடிகொண்ட இந்த ஶ்ரீ முத்தால பரமேஸ்வரியாத்தா பரமக்குடி ஊரின் காவல் தெய்வமாக போற்றப்படுகிறாள்.
(ஒரு வியாபாரியின் மகளாக பிறந்து, மன்னனுக்கும் மக்களுக்கும், "தான் ஒரு தெய்வ பெண்" என உணர வைத்து இங்கு வந்து அமர்ந்தவளாம்)
மாசியில் பூச்சொரிதல் விழா, ஆடியில் முளைக்கொட்டு திருவிழா, புரட்டாசியில் நவராத்திரி விழா எனறு, அம்மனை மகிழ்விக்க விழாக்கள் எடுத்து கொண்டாடப்படும் இத்தலத்தில், பங்குனி பிரம்மோற்சவத் திருவிழா பரமக்குடி நகரம்மட்டுமில்லாமல், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் இருந்து பெருந்திரளான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு பால்குடம் எடுத்து தங்கள் வேண்டுதல்களை வைத்தும், நேர்த்திகடன்களை நிறைவேற்றியும் வழிபடும் பிரசித்தி பெற்ற பெருந்திருவிழாவாகும்.
அன்று, அம்பிகை தன் சிம்ம வாகனத்திற்கு பதில், தன் அன்பு கணவரின் ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, வீதியுலாவாக அருகிலுள்ள சிவனாலயத்திற்கு சென்று எழுந்தருள்வது வெகு விசேஷமாம். (இச்சிவதலத்தில் பரமன் அருட்குடிகொண்டிருப்பதால், இவ்வூர் 'பரமன் குடி' என்றழைக்கப்பட்டு, பின் அப்பெயர் மருவி தற்போதைய பரமக்குடி என்றானது)
குழந்தைச்செல்வங்கள் மன தைரியம் உள்ளவர்களாகவும், கல்வி கேள்வி ஞானங்களில் சிறப்புசேர்க்கவும் இத்தலத்தில் வீற்றிருக்கும் ஶ்ரீ முத்தால பரமேஸ்வரியம்பிகையை...
Read moreIt looks good. Center place of paramakudi. If you are coming by bus , get down in FIVE cornor junction. It's near to walk.
From bus stand to temple distance will 800meters.
Lot of shops and market street is there and surrounded by temple.
More powerful, your desires and ambition will be happened truly if you...
Read more