I visited Patteeswaram, Sri Gnanambikai sametha Sri Thenupureeswarar temple as part of a Kumbakonam temple trip. This temple is famous for Goddess Durga or Gnanambikai as she’s known here. With 3 eyes, 8 hands holding weapons, but with a serene and graceful visage, Amman is an epitome of peace and wisdom here. She worshipped Lord Shiva and is supposed to have done severe penance here to attain his blessings. Patti, daughter of the celestial cow Kamadhenu was sent to assist Parvati in her penance, but soon Patti herself created a Linga to worship Lord Shiva, who pleased with her devotion blessed her, hence the name Patteeswaram
One of the unique things you’ll notice is how the Lord’s vaahan Nandi is moved a little to the left and offers a direct view of the Lord in the sanctum sanctorum. This was by way of Lord Shiva’s order so that he could view his devotee Thirugnana Sambandar who had walked in scorching heat to see the Lord. The Lord also ordered his Bhootha ganas to hold an umbrella of pearls to cool the way for the child Gnana sambandar as he made his way to the temple
Lord Ganesha presents himself in 3 different forms across the temple complex - Anugai or agnya, Madhavarna, and Swarna Vinayagar.
This is also a humongous temple complex as such with the Lord and his consort housed in separate sanctums, with a multitude of other Gods and Goddesses as well throughout the complex
Full of mythology and powerful vibrations, this is one temple one mustn’t miss on a Kumbakonam temple trip. Google maps is completely reliable for navigation, so no...
Read moreபட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்..!! மூலவர்:பட்டீசுவரர் அம்மன்:பல்வளைநாயகி, ஞானாம்பிகை தல விருட்சம்:வன்னி தீர்த்தம்:ஞானவாவி* திருஞானசம்பந்தர்தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 23வது தலம்.* ஆனி – முத்துப்பந்தல் விழா – ஆனிமாதம் முதல் தேதியில் திருஞானசம்பந்தருக்குச் சிவபெருமான் பூத கணங்கள் மூலம் முத்துப்பந்தல் அளிக்கும் விழா நடைபெறும்.இதுவே இத்தலத்தின் சிறப்பு விழா.* முத்துப்பந்தல் விழா நாளில் பகல் 12 மணிக்கு திருஞானசம்பந்தர் அடியார்களுடன் திருச்சத்திமுற்றம் கோயில் சன்னதியிலிருந்து முத்துப்பந்தல் நிழலில் எழுந்தருளி, பட்டீச்சரத்துக்கு வருதலும், பதிகம் பாடுதலும், திருமடத்துக்கு எழுந்தருளுதலும் ஆகிய காட்சிகள் நடைபெறும். தல சிறப்பு: பட்டிக்கன்று மணலினால் ஓர் சுயம்பு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்றும் பெருமானுக்குப் பட்டீச்சரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. ஞானசம்பந்தருக்கு நந்தியை விலகி இருக்கும்படி பணித்த தலம். இங்கு துர்க்கை சாந்த சொரூபியாக , மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன்,இடப்புறம் நோக்கிய சிம்ம வாகனத்துடன் அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள் பாலிக்கிறாள். விசுவாமித்திர முனிவருக்கு காயத்திரி மந்திரம் சித்தி பெற்று பிரம்மரிஷி பட்டம் பெற்றது. மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் இது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 86 வது தேவாரத்தலம் ஆகும். காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். அஷ்டபுஜங்களுடன் அருள் பாலிக்கும் இவ்வன்னையை விஷ்ணு துர்க்கை, துர்க்கா லட்சுமி எனவும் அழைப்பர். இத்தலத்து பைரவர் மிகவும் விசேசமானவர். சத்ரு தோசம், பிணிநீக்கம், விஷக்கடி, நாய்க்கடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பைரவரை வழிபட்டு பலன் அடைகிறார்கள். *இத்தலத்து பட்டீசுவரனை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கும் ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை கார்த்திகை சோம வாரம் சுவாமிக்கு 1008 சங்காபிசேகம். மாமன்னன் இராஜராஜ சோழன் முதலான சோழ மன்னர்கள் அனைவராலும் ஆத்மார்த்தமாக வழிபாடு செய்யப்பட்ட அம்பிகை இவளே. சோழமன்னர்கள் முக்கிய முடிவுகள் எடுக்கும் போதும் வெற்றி வாகை சூட போர்க்களம் புகும்போதும் இந்த தேவியின் அருள் வாக்கு பெற்ற பின்னரே செயல்படுவர் சோழ ராஜ்ஜியம் முடிவுக்கு வந்த பின்னர் துர்க்கையம்மனை இக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த துர்க்கை மற்ற தலங்களில் இருப்பது போல் அல்லாமல் சாந்த சொரூபி. இவ்வன்னை மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன் சிம்ம வாகனத்துடன் திரிபங்க ரூபமாய், எட்டுத் திருக்கரங்களுடனும், முக்கண்களுடன், காதுகளில் குண்டலங்களோடு காட்சி தருகிறாள். காளி மற்றும் துர்க்கைக்கு இயல்பாக சிம்மவாகனம் வலப்புறம் நோக்கியதாக காணப்படும்.ஆனால் சாந்த சொரூபிணியான இந்த துர்க்கைக்கு சிம்மவாகனம் இடப்புறம் நோக்கி அமைந்துள்ளது. அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள்பாலிக்கிறாள்.
*திருஞான சம்பந்தர் முத்துப்பந்தல் பெற்றது: திருச்சத்திமுற்றத்தில் வழிபட்ட பின் இத்தலத்துக்கு வந்தார். *வெயிலின் கொடிய வெப்பத்தை தணிக்க இத்தலத்து பட்டீசர் பூதகணங்கள் மூலமாய் அழகிய முத்துப்பந்தலை அனுப்பி வைத்தார். ஞானசம்பந்தர் நடந்து வந்த அழகிய காட்சியை காண, நந்தியும் விலகியது. ஞானசம்பந்தர் ' பாடல் மறை' எனத்தொடங்கும் பாமாலையை பாடி தலத்தில் தங்கினார். இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் வகையில் ஆண்டு தோறும் ஆனிமாதம் முதல் தேதி அன்று மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. காமதேனுப்பசுவின் புத்திரி பட்டி பூசித்ததால் பட்டீச்சரம் என்று பெயர் ஏற்பட்டது. ராமருக்கு சாயகத்தி நீங்கப்பெற்ற தலம். *மாளவ தேசத்து தர்மசர்மா என்ற அந்தணனுக்கு மேதாவி முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம் *துர்க்கையம்மன் மிகவும் சக்தியுள்ள தேவதையாய் விளங்குகிறார். நாயக்கர் கால கலை அம்சம் பொருந்தியகோயில் இது. மராட்டியர் கால ஓவியங்கள் கோயிலில் காணப்படுகின்றன. *மிகவும் பழமையான கோயில் இது பராசக்தியானவள் தனித்து தவம் செய்வதற்காக இத்தலம் அமைந்த இடத்திற்கு வந்து ஒரு வனம் அமைத்து தவம் செய்தாள். தேவர்கள் மரம், செடி கொடிகளின் வடிவம் தாங்கி உதவி செய்தனர்.தவத்திற்கு உதவவேண்டி காமதேனு தன் புத்திரி பட்டியை அனுப்பியது. தேவியாரின் தவத்திற்கு உதவியான பணிவிடைகள் செய்தது. தேவியாரின் தவத்திற்கு உவந்து பெருமான் தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்தார். அதனால் அப்பெருமானுக்குக் கபர்தீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. பட்டிக்கன்று வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்றும் பெருமானுக்குப் பட்டீச்சரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. மீள் தரிசனம் 18.2. 2023...
Read moreதல வரலாறு :
சத்தியலோகத்தில் இருந்த சிருஷ்டி கர்த்தாவான நான்முகன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். கலைவாணியின் வீணையில் இருந்து பிறந்த சங்கீதத்தில், ஆதி பரம்பொருளின் திருநாமம் இருப்பதை எண்ணி மகிழ்ந்த பிரம்மன், திடீரென்று நித்திரையில் ஆழ்ந்தார். இதனால் படைக்கும் தொழிலை மறந்து இருந்தார்.
இதை அறிந்த தேவர்கள், இந்திரன் தலைமையில் ஒன்று திரண்டு சத்தியலோகத்திற்கு வந்தனர். ‘பிரம்மதேவரே..!’ என்று உரக்க சத்தமிட்டனர். சத்தம் கேட்டு தான் வாசிக்கும் வீணையை நிறுத்திய கலைவாணியும், தனது கணவரான பிரம்மனிடம், ‘சுவாமி! தேவாதி தேவர்கள் எல்லாம் தங்களை தேடி வந்து இருக்கிறார்கள். எழுந்திருங்கள்’ என்றாள்.
பிரம்மனிடம் அசைவே இல்லை.. உடனே கலைவாணி, ‘தேவர்களே.. நீங்கள் என்ன நோக்கத்திற்காக வந்து உள்ளீர்கள் என்பதை யாம் அறிவோம். பிரம்மன் ஆழ்ந்த நித்திரையில் உள்ளார். அவர் இப்போதைக்கு எழுந்திருக்க மாட்டார் என்று தெரிகிறது. உங்கள் நோக்கம் நிறைவேற மகாவிஷ்ணுவை சென்று பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்’ என்றாள்..
கலைவாணியிடம் விடைபெற்ற தேவர்கள், வைகுண்டம் சென்று, நாராயணரை வணங்கி நின்றனர்.
தேவர்களை கண்ட மகாவிஷ்ணு, ‘தேவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வைகுண்டம் வந்துள்ளீர்களே.. ஏதாவது விசேஷமா?’ என்று ஒன்றும் தெரியாதது போல் கேட்டார்.
‘இறைவா.. தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை. பிரம்ம தேவர் கண் அயர்ந்து விட்டதால், படைக்கும் தொழில் நின்று விட்டது. ஆகையால் பூவுலகில் மாற்றங்கள் ஏற்படும் முன், தாங்கள் தான் அதற்கு ஒரு நல்ல வழியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்’ என்று தேவர்கள் வேண்டினர்.
‘கவலைப்படாதீர்கள்.. உங்கள் சுமையை என்னிடம் இறக்கி வைத்து விட்டீர்களல்லவா? இனி நான் பார்த்து கொள்கிறேன். போய் வாருங்கள்’ என்றார் மகாவிஷ்ணு.
இதையடுத்து தேவர்கள் அனைவரும் விடைபெற்று தேவலோகம் சென்றனர்.
அவர்கள் சென்றதும், காமதேனுவை அழைத்தார் மகாவிஷ்ணு.
வைகுண்டம் வந்த காமதேனுவிடம், ‘இப்பூவுலக உயிர்களுக்கு எல்லாம் தன் ரத்தத்தை பாலாக சொறிந்து, ஒரு தாய் போல் பராமரிக்கும் காமதேனுவே! பிரம்மன் நித்திரையில் ஆழ்ந்து விட்டார். அவர் கைவிட்ட படைக்கும் தொழிலை இனி நீதான் செய்ய வேண்டும். அதற்கு சிவன் அருள் வேண்டும். ஆதலால் இப்போதே பூலோகம் சென்று தவம் இரு. சிவன் அருள்பெற்று படைக்கும் தொழிலை மேற்கொள்வாயாக’ என்றார்.
‘பரம்பொருளே! தாங்கள் எவ்வளவு பெரிய பொறுப்பை என்னிடம் கொடுத்து உள்ளீர்கள். நான் இதற்கு தகுதி உடையவள் தானா?’ என்று கேட்ட காமதேனுவிடம், ‘உன்னை தவிர வேறு யாருக்கும் பிரம்மன் விட்டு சென்ற படைக்கும் தொழிலை செய்ய தகுதி கிடையாது. ஆதலால் தான் யாம் உன்னை தேர்வு செய்தோம்’ என்றார் மகாவிஷ்ணு.
இதையடுத்து விஷ்ணுவின் ஆசியோடு, பூலோகம் வந்த காமதேனு, கயிலாயம் என்று அழைக்கப்படும் இமயமலையில் ஈசனை நினைத்து தவம் இருக்கத் தொடங்கியது.
தட்சிண கயிலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு கீழ் காட்சி தரும், அரசம்பலவாணரை வேண்டி தவம் இரு. உன் தவம் பலன் தரும்’ என்றார் நாரதர்.
இதையடுத்து தட்சிண கயிலாயம் நோக்கி புறப்பட்டது காமதேனு. அங்கு அரசம்பலவாணர் இருக்கும் இடத்தை, தன் தவ வலிமையால் கண்டு உணர்ந்து, தினமும் பாலாபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது.
ஒரு முறை காமதேனுவின் கன்று, ஒரு புதரில் வளர்ந்து இருந்த புற்களை சாப்பிட்டது. பின்னர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. அப்போது அதன் கால்கள் புற்றுக்குள் சிக்கிக் கொண்டது.
புற்று இடுக்கில் இருந்து தன்னை விடுவிக்க கொம்பால் அதை முட்டியது. சிறிது நேரத்தில் புற்றில் இருந்து இளங்கன்று வெளியே வந்தது. இதற்கிடையே சத்தம் கேட்டு ஓடி வந்த காமதேனு, புற்றில் இருந்து ரத்தம் வெளிப்பட்டதைக் கண்டு அதிசயித்து நின்றது.
அப்போது இடப வாகனத்தில் உமாதேவியுடன் சிவபெருமான் தோன்றினார்.
அதைக் கேட்டு சிவபெருமான், ‘காமதேனுவே.. உன் தவத்தை யாம் மெச்சினோம். உன் இளங்கன்றின் செயலை குற்றமாக யாம் கருதவில்லை. ஆதலால் எம் திருமுடியில் குளம்பு சுவடும், கொம்பு சுவடும் கொண்டு அருளினோம். காமதேனுவாகிய நீ வழிபட்டதால் இந்த ஊர் காமதேனுபுரி, பட்டிபுரி என பெயர் பெறும். எமக்கு பட்டிநாதர் என்ற பெயரும் வழங்கப்படும். இது முக்தி தலம் என்பதால், இங்கு உமக்கு யாம் படைக்கும் ஆற்றலைத் தர முடியாது. திருக்கருவூர் வந்து வழிபடு. அங்கு நீ படைக்கும் ஆற்றலைப் பெறுவாய்’ என்று அருளி மறைந்தார்.
அதைத் தொடர்ந்து தனது கன்றுடன் காமதேனு, படைக்கும் ஆற்றலை பெற திருக்கருவூருக்கு புறப்பட்டுச் சென்றது.
காமதேனுவுக்கு சுயம்புவாய் தோன்றி அருள்பாலித்த அந்த சிவன் தான், நமக்கு இந்த திருத்தலத்தில் பட்டீசுவரர் என்ற திருநாமத்துடன் காட்சி தருகிறார். பசுவின் இளங்கன்று தனது குளம்பால் மிதித்ததும், கொம்பால் முட்டி தள்ளிய தடத்தையும் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும் போது...
Read more