From Mayiladuthurai railway station, anyone using the public transportation must take 3 buses and an autorickshaw to reach this temple. The first bus (Rs.10 per person) is from the railway station to the main bus stand from where we need to walk 7-10 minutes to another bus stand to board the second bus to Kollumangudi (Rs.13 per person via private bus) . It takes around 30-40 minutes to reach Kollumangudi from where we need to board the third bus to Karkathi (Rs.10 per person via private bus). It takes around 20-30 minutes to reach this place. Once you get down the bus, there are autorickshaws parked on the side of the road and charge Rs.100 fixed for the three kilometre ride through the fields to the temple. The temple is in a very quiet and secluded place. Please don't buy the archana plate from the temple as the coconuts are not good though they charge Rs.100 for it. Better to carry the items required for pooja along with oil and thiri. The archana ticket cost is Rs.5/- while those who want to do pariharam can get a bag with items for Rs.200. The temple has a pond right opposite to the main entrance and a couple of small shops on either sides selling tender coconut, meals, tea, coffee or limited soft drinks.Though not a big temple, the place is calm and peaceful. Once done with the darshan/parihara pooja, we need to follow the same order of transport to return to Mayiladuthurai...
Read moreதிருப்பாம்புரம் பாம்புரேஸ்வரர் கோவில்.
சோழநாட்டு திருத்தலங்களில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரர் கோவில் முக்கியமானது. இக்கோவில் ராகு, கேது தோஷ நிவர்த்தி பரிகார தலமாகும். ஆதிசேஷன் தனது தோஷம் நீங்க வழிபட்டதால் இத்தலம் பாம்பு+புரம்= திருப்பாம்புரம் என்றானது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடல் பெற்றது.
இத்தல இறைவன் சன்னிதி, மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகிய மூன்று பகுதிகளை கொண்டது. மகா மண்டபத்தில் தென்புறம் சோமாஸ்கந்தருக்கு தனி இடம் உள்ளது. இம் மண்டபத்தில் நடராஜரும் நடனம் புரிகிறார். இங்குள்ள முருகன், வள்ளி- தெய்வானையுடன் கையில் வேல் தாங்கி இடது காலால் மயிலை மிதித்தவாறு காட்சி தருகிறார்.
கருவறையில் பாம்புரேஸ்வரர் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ஆதிசேஷன் (உற்சவர்) ஈசனை தொழுத வண்ணம் கருவறையில் எழுந்தருளியுள்ளார். கருவறையை சுற்றிலும் அகழி உள்ளது. இறைவன் சன்னிதிக்கு இடதுபுறமாக அம்மன் ‘வண்டுசேர் குழலி’யின் சன்னிதி அமைந்துள்ளது.
அம்மை ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் ருத்திராட்ச மாலையும் கொண்டு வரத ஹஸ்தம், அபயஹஸ்தம் விளங்க தோற்றம் அளிக்கிறார். நன்றி : மாலை மலர் ராகுவும், கேதுவும் ஈசனை நெஞ்சில் நிறுத்தி ஏக சரீரமாகி அருள் பெற்றதாக புராண வரலாறு. ராகுவும், கேதுவும் கோவிலில் ஈசானிய மூலையில் தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளனர். சிவனுக்கும், அம்பாளுக்கும் ராகு காலத்தில் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வணங்குபவர்களுக்கு பாவங்கள் நீங்குவதாக ஐதீகம். மேலும் நினைத்த காரியம் நிறைவேறும்.
#தல_வரலாறு :
முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. வாயு பகவான் மலைகளை எல்லாம் தம் வலிமையால் புரட்டி வீசினார். ஆதிசேஷன் அதை தனது வலிமையால் காத்து நின்றார். இருவரும் சமபலம் காட்டி நின்றனர். திடீரென்று வாயு பகவான் உயிர் களுக்கு வழங்கும் பிராண வாயுவை நிறுத்தி விட உயிர்கள் அனைத்தும் சோர்ந்தன. இந்திரன் மற்றும் தேவர்கள் நன்றி : மாலை மலர் வேண்டுகோளுக்கு இணங்க ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கி நின்றார். வாயு பகவான் வெற்றிக் களிப்புடன் மலைகளை புரட்டி வீசினார்.
இதனால் கோபமுற்ற சிவபெருமான், வாயு பகவானையும், ஆதிசேஷனையும் பேயுருவாக போகும் படி சபித்தார். இருவரும் தங்கள் குற்றங்களை பொறுத்தருளும்படி வேண்டி நின்றனர். வாயு பகவானை வைகை நதிக்கு வடக்கிலும், மதுரைக்கு கிழக்கிலும் பூஜை செய்து வரவும், ஆதிசேஷனை திருப்பாம்புரத்தில் 12 ஆண்டுகள் தம்மை பூஜை செய்து வரவ உத்தரவிட்டார். அதன்படி ஆதிசேஷன் திருப்பாம்புரம் வந்து தீர்த்தம் ஏற்படுத்தி வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக தல புராணம் கூறுகிறது.
கயிலாயத்தில் ஒரு முறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்தில் இருந்த பாம்பு, விநாயகர் தன்னை வணங்குவதாக நினைத்து கர்வம் கொண்டது. இதை ஞான திருஷ்டியால் உணர்ந்த சிவன், நாக இனம் முழுவதும் தேவசக்தியை இழக்கும் படி செய்தார். அதனால் உலகைத்தாங்கும் ஆதி சேஷனும், ராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தியை இழந்து துன்பப்பட்டன.
நாக இனங்கள் சாப விமோசனம் வேண்டி ஈசனை துதிக்க இறைவனும் மனம் இரங்கி பூவுலகில் சேஷபுரி என்ற திருப்பாம்புரத்தில் சிவராத்திரி அன்று தன்னை வழிபட்டால் சாப விமோசனம் அடையலாம் என அருளினார். நன்றி : மாலை மலர். அதன்படி ராகு, கேது மற்றும் ஆதிசேஷன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்க பாலன், குளிகன் பத்மன், மகா பத்மன் ஆகிய அஷ்டமாநாகங்கள் திருப்பாம்புரம் வந்தன. அங்கு ஆல மர விழுதை நாராக கொண்டு அத்திப்பூவை அதில் தொடுத்து பூஜை செய்து வந்தன.
மகா சிவராத்திரி அன்று ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் முதல் ஜாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திரு நாகேஸ்வரம் நாகேஸ்வரரையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாப விமோசனம் பெற்றன.
#பரிகார_முறை :
ராகு, கேது தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்து கொள்ள விரும்புபவர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் கோவிலுக்கு வந்து ஆதிசேஷன் தீர்த்தத்தில் நீராடி, விளக்கு ஏற்ற வேண்டும். சுவாமி, அம்பாளுக்கு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.
ராகு, கேது சன்னிதியில் அமர்ந்து பூவும், குங்குமமும் வைத்து அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை வீட்டுக்கு எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து 48 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். பிரார்த்தனை நிறைவேறியதும் மஞ்சள் துணியில் வைத்து எடுத்து வந்து அதை கோவில் உண்டியலில் போட வேண்டும்.
தினமும் கோவிலில் 4 கால பூஜை நடைபெறும். புதன்கிழமை காலை 6.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், வியாழக்கிழமை மதியம் 1.30 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் பூஜை நடைபெறும். மாசிமகம், ராகு, கேது பெயர்ச்சி, மகா சிவராத்திரி போன்ற...
Read moreVery powerful temple. Even though named as South kalahasthi, rahu kethu Pooja is totally different from kalahasthi, First we have to worship lord Shiva and vandarkuzhali Amman, put deepam for rahu kethu, tie Vasthiram on Vani tree. This is compulsory for everyone visiting temple. Then for rahu kethu parihara Pooja, they provide separate ticket and things for the Pooja. Pooja performed for half an hour to 40 mins. Then after completing Pooja, they make us to provide annadhanam to the needy people. Annadhanam to 2 people in the name of rahu and 2 people in the name of kethu. Now coming to the price list. Archanai ticket and things in the bag Archanai for appa and amma, 19 diyas. 1 for lord pillayar, 9 for rahu and 9 for kethu, vasthiram with thali for unmarried people and only vasthiram for married people. 300 for unmarried people 400 for married couples For worshipping lord Shiva ( appa) and vandarkuzhali (Amma). This is compulsory and making people to do archanai compulsory whoever visits for the first time. Parihara Pooja. This is separate token. Cost 320rs. Anna dhanam cost separate. Inside temple it cost around 1000rs. Travel. Mini bus available from peralam, kollumangudi. Straight bus from Kumbakonam. Share auto from bus stop to temple. Nearly 3km...
Read more