அருள்மிகு ஶ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஶ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயில், காலடிப்பேட்டை, திருவொற்றியூர் வட்டம், சென்னை.
சுமார் 450-ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, இந்த வைணவ திருத்தலத்தின் 'திரிதளம்' விமானத்தின் கீழுள்ள கருவறையில் நம் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவியர் இருபுறமும் உடனிருக்க ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் எனும் திருநாமத்துடன் நின்றகோலத்தில் அருட்காட்சியளிக்கிறார்.
தனி சன்னதியில் ஸ்ரீ பெருந்தேவி தாயார் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
சென்னை மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற பழமையான பெருமாள் ஆலயங்களில் இத்தலமும் ஒன்றாகும்.
இடது திருக்கரத்தில் தண்டம் வைத்தபடி காட்சிதரும் இத்தலத்தின் உற்சவர் ஸ்ரீ பவளவண்ணப்பெருமாள் பிரசித்தி பெற்றவர். பங்குனி உத்திரத்தில் இவருக்கு நடைபெறும் திருக்கல்யாணம் வெகு விசேஷமாம். அன்று காலையில் உற்சவர் பவளவண்ணர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் தாயார் சன்னதியின் முன் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அப்போது பவளவண்ணருக்கும், பெருந்தேவி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று முழுவதுமே பெருமாள், தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். அப்போது விசேஷ திருமஞ்சனங்கள் நடக்கும். மறுநாள் காலையில் பெருமாள் மீண்டும் மூலஸ்தானம் திரும்புகிறார்.
(இந்த திருக்கல்யாணத்தின்போது, திருமணமாகாதவர்கள் சுவாமிக்கு மட்டைத்தேங்காய் நைவேத்தியம் படைத்து வழிபட்ட பின், அந்த தேங்காயை வீட்டிற்கு எடுத்துச்சென்று பூஜையறையில் வைத்து வழிபட, நல்வாழ்க்கைத்துணை விரைவில் அமையப்பெறும் என்பது நிச்சமாம். திருமண வரம் அருளும் பெருமாள் என்பதால், ஸ்ரீ கல்யாண வரதராஜப்பெருமாள் எனும் திருப்பெயரில் அழைக்கப்படுகின்றார்)
தன் பக்தருக்காக பெருமாள் காட்சி தந்த தலம்; முற்காலத்தில், காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பவளவண்ணப்பெருமாள் ஆலயத்தின் உற்சவர் மீது அதீத பற்றுகொண்டிருந்த விஜயராகவாச்சாரியார் என்ற பக்தருக்காக, அந்த உற்சவர் கோலத்திலே இறைவன் திருக்காட்சி தந்த தலம் என்கிறது ஆலய வரலாறு.
வைகுண்ட ஏகாதசி, வைகாசி பிரம்மோற்சவம், கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமிக்கு முந்தைய நாள் தொடங்கி 9-நாட்கள் நடைபெறும் 'கர்ப்ப உற்சவம்' விழா என, விழாக்களுக்கு பஞ்சமில்லை இத்தலத்தில்.
நூற்றாண்டுகள் பல கடந்த இத்தலத்திற்கு, (கடைசியாக 2003-ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது) 20-ஆண்டுகளுக்கு பிறகு, சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த 20/08/2023-ஞாயிறு அன்று, மிகச்சிறப்பாக 🙏🏻மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. தற்போது 48-நாட்களுக்கான மண்டலாபிஷேகம்...
Read moreThe temple is situated in Kaladipet near Tiruvottiyur, a suburb of Chennai. The temple is very recently renovated and the Raja Gopuram offers a beautiful view. There are Sannadhis for Varadaraja Swamy with His consorts, Perundevi Thayar, Andal, Rama, and Hanuman. There is also a separate Sannadhi for Navagrahas. Neat and clean environment. Ample space for play for children. The temple is about 500 meters from Kaladipet Metro station. Temple timings are from 7 a.m. to 11 a.m. and from 5 p.m. to 8 p.m. It is believed that the deity gladly fulfils the genuine wishes of his devotees and there is always a moderate crowd at...
Read moreDevotional place my bith place temple lots of experience with this temple we grown up with the temple and the festivals, enjoying each and every festivals, Thirumanchanam done for Perumal and Thayar is divine.Thayar sannathi separately located around Anjaneyar ,Sakarthalvar,Andal and Nayanmar.Ramar Sannadhi around the Thepakulam is admirable.Saturdays are bsy.The Andal kalyanam done here is very spiritual...
Read more