Worst customer service கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பாதையில் வீரபாண்டி பிரிவுக்கும் காரமடைக்கும் நடுவில் ஆனந்தாஸ் எனும் இந்த உணவு விடுதி உள்ளது.ஏற்கனவே ஒருமுறை சாப்பிட்ட நினைவு உண்டு.
இன்றிரவு 23.09.2018 எட்டரை மணி வாக்கில் பிள்ளைகளுக்கு பசிப்பதாகச் சொன்னதால் சாப்பிட்டே போய்விடுவோம் என்று இந்த ஹோட்டலுக்கு வந்தோம். உள்ளே நுழைந்து எல்லோருக்கும் நெய் ரோஸ்ட் ஆர்டர் செய்தோம். மகன் பட்டர் நான் வித் பனீர் பட்டர் மசாலா வேண்டும் என்று கேட்டதால் அதையும் இரண்டு பிளேட் ஆர்டர் செய்தோம். கூடவே பனீர் 65 ஒரு பிளேட்டும்.
சப்ளை செய்ய வந்த பையன் அமர்ந்திருக்கும் ஒவ்வொருவர் முன்னும் தட்டை வைக்காமல் மொத்தமாக ஒரே இடத்தில் வைத்துவிட்டுச் சென்றான். போகட்டும் என்று அவற்றை எல்லோருக்குமாக நாங்களே எடுத்து வைத்துக் கொண்டோம். பின்னர் பனீர் 65 ஐ ஆர்வமாக எடுத்துப் பார்த்தால் அது காளான் 65. அங்கிருந்த சூபர்வைசரை அழைத்து பனீர் ஆர்டர் கொடுத்தோமா காளான் ஆர்டர் கொடுத்தோமா என்று கேட்டேன். அவர் பனீர்தானே என்றார். தட்டிலிருந்த காளானைக் காண்பித்ததும் ஒரு ஸாரி ஒரு மன்னிப்புகூட கேட்காமல் "மாத்திட்டானுங்களா" என்றுவிட்டு எடுத்துச் சென்றார்.
இதற்கிடையில் நான் வித் பனீர் பட்டர் மசாலா வந்திருந்தது. அதனை எடுத்து சாப்பிட்டால் நானில் பட்டர் இல்லை,மட்டுமின்றி ஏற்கனவே போட்டு வைத்திருந்தார்களோ என்னவோ தெரியவில்லை. சவச்சவ என்று ரப்பர் போல இருந்தது.மேலும் ஒரேமாதிரியான புளிப்பு வாசம் வேறு. மீண்டும் சூபர்வைசரை அழைத்து"நானில் பட்டர் போடலையா ?" என்று கேட்க அவர் "இல்லையே சார் பட்டர் போட்டிருக்கோமே" என்றார். அருகில் அழைத்து தட்டைக் காண்பித்து பட்டர் வாசனைகூட இல்லை என்று நிரூபிக்க முயற்சித்தோம். ஆனால் அவரோ" பட்டர் எல்லாம் போட்டிருக்கு,அது அப்படியே கரைஞ்சு இறங்கியிருக்கும்" என்றவாறு சப்பைக்கட்டு கட்டினார். சரி தொலையட்டும் என்று சாப்பிடத் துவங்கினால் அது வாயில் இறங்கவே இல்லை.பேசாமல் வைத்துவிட்டு மீண்டும் சூபர்வைசரை அழைத்து "பட்டர் நான்,பனீர் பட்டர் மசாலா எதுவுமே நன்றாக இல்லை " என்று சொன்னோம். அதற்கு அவர் "இல்லை சார் எங்க ஹோட்டல்ல அது நல்லாருக்கும்,வேணும்னா இன்னொரு பிளேட் தர்ரேன் சாப்பிட்டுப் பாருங்க" என்று சொன்னார். யாருக்கும் மூட் இல்லை. இந்தச் சூழலில் பசி போயே போய்விட்டது. ஆகவே வேண்டாம் வேண்டாம் என மறுத்தோம்.
அதற்குள் பிள்ளைகள் தோசையைச் சாப்பிட்டு முடித்திருக்க பில் கொடுக்கச் சொல்லிவிட்டு சரி கிளம்பலாம் என்று எழுகையில் முன்னம் வந்த அதே சப்ளையர் பையன் நான் ரொட்டியை கொண்டு வந்து அதேபோல டேபிளில் வைத்தான் (நியாயமாக டேபிளில் எறிந்தான் என்று சொல்ல வேண்டும்) நாங்கள் "வேண்டாம்ப்பா நாங்க கிளம்பிட்டோம்" என்று மறுக்க, ஒரு முறைப்புடன் வேகமாக எடுத்துக்கொண்டு போய் அங்கிருந்த ஒரு டேபிளில் வீசியெறிந்துவிட்டு ஏதோ முணுமுணுத்தபடி போனான்.
அவன் அங்குள்ள ஆட்களிடம்" தூக்கிக் குப்பைல போடுய்யா அந்த நானை" என்று சப்தம்போட்டுக் கொண்டிருந்தது இங்கு காதில் விழுந்தது. மீண்டும் திரும்பி வந்த அந்தப்பையன் டேபிளை சுத்தம் செய்துகொண்டு இருந்த வட இந்திய சிறுவனின் கையிலிருந்த அந்த நான் பிளேட்டைப் பறித்து வேகமாக விளக்குமாறு,துடைக்கும் துணி ஆகியவை வைக்கப்பட்டிருந்த பாழடைந்த ஒரு ரேக்கில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றான். சூபர்வைசரோ ஒருவிதமான ரசிக்கும் பாவனையில் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் பில்லுக்கு பணம் கொடுத்தபடி அவரிடம் "கஸ்டமர இப்படித்தான் ஹேண்டில் பண்ணுவீங்களா..? உங்க ஹோட்டல் உணவுக்கு குப்பைல போடற தகுதிதான் இருக்குன்னு உங்க சப்ளையர் சொல்றாரோ" என்றேன். அந்த மனிதர் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் பணத்தைப் பிடுங்கியவாறு வேகமாக நகர்ந்தார்.சாப்பிட வந்தவர்களை கொஞ்சமும் மனிதனாகக்கூட மதிக்காமல் மிகவும் மோசமாக நடந்துகொண்ட வைஷ்ணவி ஆனந்தாஸ் ஹோட்டலில் வயிற்றையும் கெடுத்து மனதையும் நோகடித்து அனுப்பினார்கள்.
அதற்குள் குழந்தைகள் தூக்கம் வருது போலாம் என்று சிணுங்க, கேஷில் கம்ப்ளைண்ட் செய்யலாம் என்று போனால் அங்கு கல்லாப்பெட்டியில் ஒரு வயதான பெரிய மனிதரை அமர வைத்திருந்தார்கள். அவர் மய்யமாக எல்லாவற்றையும் பார்த்தபடி அமர்ந்திருந்தார். மொத்தத்தில் சாப்பிடச் சென்று விட்டு அரைகுறை வயிற்றுடனும் மிகுந்த எரிச்சலுடனும் வெளியே வந்தோம்.
#அந்தப்பக்கம் செல்லும்போது தெரியாமல் கூட இந்த ஹோட்டலுக்குள் நுழைந்து விட...
Read moreFacebook share..
கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பாதையில் வீரபாண்டி பிரிவுக்கும் காரமடைக்கும் நடுவில் ஆனந்தாஸ் எனும் இந்த உணவு விடுதி உள்ளது.ஏற்கனவே ஒருமுறை சாப்பிட்ட நினைவு உண்டு.

Read moreFamous pure veg restaurant in Coimbatore - Mettupalayam - Ooty road, famous for tourists who travel to Ooty and Coimbatore in Mettupalayam road. You can get all the veg foods like annapoorna restaurant in Coimbatore. You can try different dosas and mushroom briyani. Afternoon you can get full means with sambar rasam poriyal etc, there is separate hall for conducting small functions with capacity of 50.... You can conduct small birthday parties or any other function you wish.... Hall can be booked prior to the visit depending on...
Read more