மிகவும் மோசமான அனுபவம் : கன்னிமாரா உணவகம், காங்கேயம் ரோடு, திருப்பூர்.
நானும் எனது சகோதரியும் நேற்று முன்தினம் இரவு உணவு அருந்த காங்கேயம் ரோட்டில் உள்ள கன்னிமாரா உணவகத்திற்கு சென்றிறுத்தோம். நாங்கள் ஆர்டர் செய்த உணவுகள்,
கிரில் சிக்கன் - 1/2 பெப்பர் கிரில் சிக்கன் - 1/2
நாங்கள் இதை சாப்பிடும் பொழுது துர்நாற்றம் வீசியது, கண்டிப்பாக இது பழைய சிக்கன், நாங்கள் சாப்பிடாமல் வைத்துவிட்டோம். இதை பற்றி பில் கவுன்ட்டரில் உள்ள நபரிடம் புகார் செய்தபொழுது அவர் பேசிய விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது பதில், அவர்கள் பழைய சிக்கனை உபயோகிப்பது அவருக்கு ஏற்கனவே தெரிந்தது போல் இருந்தது.
நான் : அண்ணா, சிக்கன் பழையதாக இருக்கும் போல துர்நாற்றம் வீசுது, நாங்க சாப்பிடவே இல்லை அப்டியே வைத்து விட்டோம்.
பில் கவுண்டர் : அப்டியா, என்னனு பாக்கறங்க அண்ணா,
இவ்வளவுதான் பேசினார், தன்னுடைய பொருள் சுகாதாரமற்றது என்று ஒருவர் சொல்லும்பொழுது உண்மையில் ஒருவர் செயல் எப்படி இருக்கும், அண்ணா வாய்ப்பே இல்லை எங்கள் உணவகத்தில் பழைய பொருளா வாய்ப்பே இல்லை, பொறுங்கள் இப்பவே என்னவென்று பார்கிறேன் என்று சொல்லி உடனே வைட்டரை அழைத்து பேசி என்னவென்று பாத்திருக்கணும் அல்லவா, ஆனால் அவர் அப்டியா, என்னனு பாக்கறங்க அண்ணா, என்று சொல்லிவிட்டு நாங்கள் சாப்பிடாமல் வைத்துவிட்டு வந்த பழைய நாற்றம் அடிக்கற சிக்கனுக்கும் சேர்த்து காசை வாங்கிவிட்டு எதுமே நடக்காததுபோல் அடுத்த பில்லை வசூல் செய்வதில் கவனம் செலுத்தினார்.
தெரிந்தே இதுபோல் கெட்டுப்போன உணவை விற்று காசு வாங்குவது என்பது எந்த மாதிரியான மனநிலை என்று தெரியவில்லை. கலப்படமான உணவை விற்பது என்பது எவ்வளவு கேவலமான மனநிலை. இனிமேல் என்வாழ்நாளில் இந்த உணவகத்திற்கு செல்லமாட்டேன். ஒருவேளை 6 மாதத்திற்கு ஒருமுறை சாப்பிடும் அளவு வசதி படைத்த ஏழை எளிய மக்கள் இதை சாப்பிடும் பொழுதோ அல்லது அவர்கள் குழைந்தைக்கு வாங்கி கொடுக்கும் பொழுதோ, அந்த குழைந்தை கிரில் சிக்கன் இப்படித்தான் இருக்குமோ என்று நினைத்து சாப்பிட்டுவிடும், ஆனால் இந்தமாதிரியான பாவங்களை இவர்கள் எப்படி கழிக்கப்போகிறார்களோ தெரியவில்லை.
Veg நூடுல்ஸ் : கூடுதல் காய்கறிகளை உபயோகப்படுத்தி தாயார் செய்ய சொன்னோம். ஆனால் எங்களால் காய்கறிகளை கண்டுபிடிக்க முடியவில்லை, இறுதியாக கொஞ்சம் முட்டைகோஸை பார்த்து மகிழ்ச்சி அடைத்தேன், மிகவும் மோசம். ஒருவேளை கூடுதல் காய்கறிகளை பயன்படுத்த அறிவுறுத்தாமல் இருந்திருத்தால் இந்த முட்டைகோஸும் போட்டுருக்கமாட்டாங்கனு நினைக்கறேன்.
ரோமலி ரொட்டி + சிக்கன் கிரேவி : இந்த இரண்டும் அருமையாக இருந்தது,
குறிப்பு : நான் அதிகமுறை இங்கு சென்று உணவு அருந்தியுள்ளேன், கடைசியாக சாப்பிட்ட இரண்டு முறையும் இப்படி மோசமாக இருந்தது, சென்ற முறை ஏதேனும் தவறு நடந்திருக்கும் சரி செய்து கொள்வார்கள் என்று நினைத்து பதிவிடவில்லை, ஆனால் இந்த முறையும் இப்படி மோசமாக இருந்தது மிகவும்...
Read moreVery poor service and food quality. I literally saw them cooking a thangidi Kabab from the chicken kept for display. I would suggest you to take off this destination from your favourites list , for a hearty meal. No personal grudges. At least you must not be a victim to such newly start up , low end hotels. The shawarma is bad , Biriyani isn't biriyani at all. Overall rating 0.5. since there is no half star , I had to choose one star rating. Note : this is my first negative review. Depict how much I would have been hurt with...
Read moreVisited for a light dinner with a soup and a couple of shawarmas on Wednesday evening. The place wasn’t very crowded- scooter parking is covered and the car parking is right beside the road- there’s a personnel for assistance.
The menu is sufficiently elaborate for enough vegetarian and non-veg choices. We had a manchow soup and a couple of shawarmas- one chicken and one paneer, of which the paneer was super creamy and yummy!
At the billing while paying with card, we picked two meetha pan and it was offered...
Read more