Arultharum Ganthimathi Ambaal Temple
Arultharum Ganthimathi Ambaal Temple things to do, attractions, restaurants, events info and trip planning
Plan your stay
Posts
அருள்மிகு காந்திமதி அம்மன் திருநெல்வேலி. பொது தகவல்: பிரகாரத்தில் கன்னி விநாயகர், நந்தி தேவர், பாண்டியராஜா சன்னதிகள் உள்ளன. பிட்சாடனர், ரிஷிபத்தினியர் உருவங்கள் கல்லில் வண்ணந்தீட்டப்பட்டுள்ளன. அகத்தியர் பிரதிஷ்டை செய்த சால்வடீஸ்வரர், சிவலிங்கத் திருமேனி சற்றுத் தாழ்வில் உள்ளது. நெல்லையப்பர் கோயிலுக்குள் பொற்றாமரைக் குளமும், நடுவில் நீராழி மண்டபமும் உள்ளது. இக்கோயிலில் 96 தூண்கள் உடைய ஊஞ்சல் மண்டபம், மகாமண்டபம், நவகிரக மண்டபம், சோமவார மண்டபம், சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் ஆகிய மண்டபங்களில் அழகிய சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. நாட்டிலேயே மூன்றாவது பெரிய திருத்தேர் நெல்லையப்பர் திருத்தேர். அரியநாத முதலியாரால் ஏற்படுத்தப்பட்ட ரதவீதிகளில் 1505-ல் முதல்முறையாக தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. இக்கோயிலில் உள்ள பொள்ளாப்பிள்ளையார் இதனை மலைமண்டலத்தைச் சார்ந்த முந்திக் கோட்டு வீரம் அழகிய பாண்டிய தேவன் உருவாக்கினார் என்று கல்வெட்டில் எழுதப் பெற்றுள்ளது. பிள்ளையாருக்கு பிள்ளைத்தூண்டு விநாயகர் என்றும் ஒரு பெயர் உண்டு. நெல்லை மக்கள் அம்பாள் காந்திமதியை அம்மை என்றும், நெல்லையப்பரை அம்மையப்பர் என்றும் அழைக்கின்றனர். வெண்ணிற ஆடை அம்பிகை:காந்திமதிக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலையில் விளாபூஜை (7 மணி) நடக்கும் வரையில் அம்பிகை வெண்ணிற புடவையிலேயே காட்சி தருகிறாள். இறுதிக்காலத்தில் உலகம் அனைத்தும் அம்பிகையிடம், ஐக்கியமாவதை உணர்த்தும்விதமாக இவ்வாறு காட்சி தருவதாக ஐதீகம். தனித்தனி பூஜை: நெல்லையப்பர் கோயிலில் சுவாமிக்கு தனி ராஜகோபுரமும், அம்பாளுக்கு தனி ராஜகோபுரமும் உண்டு. இரண்டு சன்னதிகளையும் மிக நீளமான சங்கிலி மண்டபம் ஒன்று இணைத்து வைக்கிறது. பார்ப்பதற்கு தனித்தனி கோயில்கள் போன்ற உணர்வு ஏற்படும். பொதுவாக கோயில்களில் சுவாமி, அம்பாள் இருவருக்கும் ஒரே ஆகமப்படிதான் பூஜை நடக்கும். ஆனால், இங்கு காந்திமதி அம்பாள் தனிக்கோயிலில் இருப்பதால் காரண ஆகமப்படியும், நெல்லையப்பருக்கு காமீக ஆகமப்படியும் ஆறு கால பூஜை நடக்கிறது. காந்திமதி சீர் : பெண்கள், திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சீர் கொண்டு செல்வதுபோல, காந்திமதி அம்பிகையும் தனது திருக்கல்யாணத்தின் போது, சீர் கொண்டு செல்கிறாள். ஐப்பசி பிரம்மோற்ஸவத்தின் முதல் பத்து நாட்கள் அம்பாள், சிவனை மணக்க வேண்டி தவமிருப்பாள். பத்தாம் நாளில் கம்பை நதிக்கு எழுந்தருள்வாள். 11ம் நாள் மகாவிஷ்ணு, தன் தங்கையை மணந்து கொள்ளும்படி சிவனை அழைப்பார். சிவனும் அவரது அழைப்பை ஏற்று, அம்பிகையை மணம் செய்வார். அப்போது பக்தர்கள், மணமக்களுக்கு திருமண ஆடைகள் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. 12ம் நாளிலிருந்து இருவரும், 3 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் காண்கின்றனர். 14ம் நாள் இரவில் சுவாமியும், அம்பாளும் மறுவீடு செல்கின்றனர். அப்போது அம்பிகை அப்பம், முறுக்கு, லட்டு என சீர் பலகாரங்கள் கொண்டு செல்கிறாள். இதனை, "காந்திமதி சீர்' என்பார்கள். அன்னம் பரிமாறும் அம்பிகை : இக்கோயிலில் காந்திமதி அம்பாள், கணவர் நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில் அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். இதன் அடிப்படையில் அம்பாள் சன்னதி அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, பருப்பு, சாம்பார் சாதம், ஊறுகாய் என வகைவகையான நைவேத்யங்களை சிவன் சன்னதிக்கு கொண்டு செல்கின்றனர். அங்குள்ள அர்ச்சகர்கள் அவற்றை சிவனுக்கு படைக்கின்றனர். இப்பூஜை முடிந்தபின், அம்பாளுக்கு அதே நைவேத்யம் படைத்து பூஜை நடக்கிறது.
RKS MURUGAN
00
Very old and big temple situated nex to nellai yappar temple. You can go through nellai yappar temple too because the two temples sharing one path way. The goddes amman is believed to protect the world from devils. The temple is constructed with use of full black stones and the architecture design is mind blowing.
Vi jay
00
Very old and big temple situated nex to nellai yappar temple. You can go through nellai yappar temple too because the two temples sharing one path way. The goddes amman is believed to protect the world from devils. The temple is constructed with use of full black stones and the architecture design is mind blowing.
TEETU'S LIFESTYLE
00
It's a place to cleanse your brain with architectural treasures and peaceful surroundings this place gave me the feeling of being away from my responsibilities and problems in a good way I would recommend you to take your family there....
Kalyani Kanthimathi
00
Don't miss this tample
Sharath Ravi
00
Nearby Attractions Of Arultharum Ganthimathi Ambaal Temple
Arulmigu Nellaiappar Temple

Arulmigu Nellaiappar Temple
4.7
(7K)
Click for details
Nearby Restaurants Of Arultharum Ganthimathi Ambaal Temple
Aryaas Sweets & Bakery's
Nellai Saravana Bhava
Vairamaligai Non-veg
Vinjai Vilas (since 1924)
Vairamaligai Parotta Stall
Sri Visaha Bhavan
Kasi Vilas Non veg restaurant
Abul Parotta Stall
Aruvi Bakery and Sweets - Town Branch
Hotel Manohara

Aryaas Sweets & Bakery's
4.5
(503)
Click for details

Nellai Saravana Bhava
4.1
(455)
Click for details

Vairamaligai Non-veg
3.7
(502)
Click for details

Vinjai Vilas (since 1924)
4.2
(381)
Click for details
Basic Info
Address
PMGP+VWP, Tirunelveli Town, Tirunelveli, Tamil Nadu 627001, India
Map
Phone
+91 462 233 9910
Call
Reviews
Overview
4.9
(31 reviews)
Ratings & Description
cultural
family friendly
accessibility
attractions: Arulmigu Nellaiappar Temple, restaurants: Aryaas Sweets & Bakery's, Nellai Saravana Bhava, Vairamaligai Non-veg, Vinjai Vilas (since 1924), Vairamaligai Parotta Stall, Sri Visaha Bhavan, Kasi Vilas Non veg restaurant, Abul Parotta Stall, Aruvi Bakery and Sweets - Town Branch, Hotel Manohara
