சில வருடங்களுக்கு முன் திருப்பணி செய்யப்பட்ட, இந்த பழமையான சிவாலயத்தின் கருவறையின் ருத்ராட்ச பந்தலின் கீழ் நம் இனிய ஈசன், ஶ்ரீ சிரவணமாபுரீஸ்வரர் எனும் திருப்பெயருடன் சற்றே பெரிய சுயம்பு லிங்க மூர்த்தியாய் திருஅருட்காட்சியளிக்கிறார்.
சுமார் 4-அடி உயரத்துடன், முன் சற்று புடைப்பாகவும், பின்புறம் சற்று குழியாகவும் சீரற்ற வடிவில், (சுயம்பு மூர்த்தமாகையால் கரடு முரடாக) அமைந்துள்ள நம் ஈசனின் இந்த சுயம்பு லிங்கத்திருமேனியை அபிஷேத்தின்போது மட்டுமே காணமுடியும். இவர் எந்த காலத்தவரோ? அவருக்கு மட்டுமே தெரியும்) ஆனால், அலங்காரம் செய்து, நாகாபரணம் சாற்றிய நிலையில் தரிசனம் காணும்போது, செதுக்கப்பட்ட லிங்கத திருமேனியாய் நம் இறைவன் மிளிர்வது சிலிர்ப்பு.
தனி சன்னதியில், வலது திருக்கரத்தில் கருங்குவளை மலர் ஏந்தியும், இடது திருக்கரத்தை கீழே தொங்கவிட்ட நிலையிலும் நின்ற திருக்கோலத்தில் ஶ்ரீ சிவகாமி அம்மன் (புன்னகை ததும்ப) அழகு அருட்காட்சியளிக்கிறாள்.
(ஆறுமுகக்கடவுளின் திருப்பெயர்களுள் ஒன்று சிரவணன். அந்த பெயரிலேயே ஓர் ஊர் இருப்பதும், அங்கே ஶ்ரீ சிரவணமாபுரீஸ்வரர் எனும் திருப்பெயருடன் நம் ஈசன் அருட்காட்சி தருவதும் சற்றே வித்தியாசமாக உள்ளது)
மகா சிவராத்திரி மற்றும் ஐப்பசி அன்னாபிஷேக விழா சிறப்பாக கொண்டாடப்படும் இத்தலத்தில், தடைபெற்றுக்கொண்டே செல்லும் திருமணம், நலமான மகப்பேறு கைகூடவும், விவசாயம் மற்றும் தொழில்வளம் சிறப்புடன் ஏற்றம் பெறவும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ காலங்களில் சிறப்பு...
Read moreThis is a very old Shiva temple. Lord baghvan and baghvaeswari are main diety There are separate Shani, Raghu and ketu temple inside. This temple is open in morning from 8 to 9 am. Only on paradosh timings it is open in the evening time. There is also arasaradi vinayakar temple. There is bikes villvam tree 2 no's inside the temple. There is lot of...
Read moreகோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் மாவட்ட நெடுஞ்சாலையின் அருகிலேயே அமையப்பெற்றுள்ளது இத்திருக்கோயில். இத்திருக்கோயிலில் எல்லாம் வல்ல சிவபுராமீசுவரரும், சிவகாமி அம்மனும் வீற்றிருக்கிறார்கள். மக்களுக்கு அருள் தருகிறார்கள். மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலில் மாதந்தோறும் கிருத்திகை பிரதோஷம் மற்றும் பிற இறைவனுடைய திருநாட்கள் அன்று மக்கள் அதிகமாக வழிபடுவார்கள். பிரதோஷம் அன்று மிகச்சிறப்பாக இருக்கும். கோயிலின் வெளிப்புறத்தில் உள்ள சிறு கடைகளில் சிவனுக்கு உகந்த வில்வ இலைகளும், பூக்களும் விற்கப்படுகின்றன. கோவிலின் தீபாரதனை முடிந்தபிறகு மக்களுக்கு இறைவனின் பிரசாதமும் வழங்கப்படுகின்றன. மனமுருகி நீங்கள் எதை வேண்டினாலும் உங்கள் வேண்டுதல் உண்மையாகவும் மூலமாகவும் உறுதியாக இருந்தால் நிச்சயம் அது நிறைவேறும். என்னுடைய வேண்டுதல் எனக்கு நிறைவேறி இருக்கிறது....
Read more