அருள்மிகு பங்கஜாம்பாள் சமேத கங்காதரேசுவரர் திருக்கோவில் புரசைவாக்கம்.
தலவரலாறு: சூரியகுலத்து வேந்தன் சகரன், அயோத்தியை தலைநகரமாக கொண்டு அரசாண்டு வந்தான். தனது நாடும் மக்களும் நலமுடன் வாழ அஸ்வமேத யாகம் தொடங்கினான். வேள்விக் குதிரையை ஒவ்வொரு தேசமாக அனுப்பியபோது, தனது பதவிக்கு இது ஆபத்தாக முடியுமோ என அஞ்சிய இந்திரன், வேள்விக் குதிரையை கவர்ந்து சென்று பாதாள லோகத்தில் கபில முனிவர் தவம் செய்யும் குகையில் கட்டி வைத்தான். குதிரையைக் காணாது தவித்த சகரன், குதிரையைத் தேட தனது அறுபதாயிரம் புதல்வர்களை அனுப்பினான். தவத்தில் ஆழ்ந்திருந்த கபிலர் தான் குதிரையை கவர்ந்து கொண்டு வந்திருப்பார் என எண்ணிய சகர புத்திரர்கள் கபிலரைத் தாக்கினர். கடுங்கோபம் கொண்ட கபிலர் தம் தவ வலிமையால் சகர புத்திரர்கள் அனைவரையும் சாம்பலாக்கினார். தனது புதல்வர்கள் நாடு திரும்பாததைக் கண்டு கலங்கிய சகரன், அவர்களைத் தேடி வர தனது பேரன் அம்சுமானை அனுப்பினான். கபிலரை சந்தித்த அம்சுமான் அவரைப் பணிந்து வணங்கினான். நடந்தவை அனைத்தையும் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். ஆகாச கங்கையை பூமிக்கு கொண்டு வந்து அந்தப் புனித நீரினால் பாதாளத்தில் உள்ள சகர குமாரர்களின் சாம்பலைக் கரைத்தால், அவர்கள் சாபம் நீங்கி நற்கதியடைவார்கள் என்பதையும் தெரிந்து கொண்டான். கங்கையை பூமிக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கிய அம்சுமான், கடும் தவம் புரிந்தான். பலனில்லை. அம்சுமானின் தவத்தை அவரது வாரிசான திலீபனும் மேற்கொண்டான். கங்கையை பூமிக்கு கொண்டு வர தளராது உழைத்தான். அவன் வாழ்நாளில் அந்தப் பெரிய பணியை முடிக்க முடியவில்லை. திலீபனைத் தொடர்ந்தான் பகீரதன். ஈசனின் கருணையால் பகீரதனின் கோரிக்கை நிறைவேறியது. ஆகாச கங்கையை தன் முடியில் தாங்கி, ஈசன் பூமியில் மெல்ல ஓட விட்டார். பகீரதன் கங்கையை அழைத்து சென்று, பாதாள லோகத்தில் இருக்கும் தன் முன்னோர்களின் சாம்பலை அதன் புனித நீரில் கரையச் செய்தான். சகர புத்திரர்கள் சாபம் நீங்கி நற்கதி அடைந்தனர். கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றிய பகீரதன், அயோத்தியின் சிம்மாசனத்தில் அமர்ந்து அரசாள தொடங்கினான். காலப் போக்கில் இறை வழிபாட்டை மறந்தான். பகீரதனுக்கு பாடம் புகட்ட ஈசன் திருவுளம் கொண்டார். அயோத்தி ராஜ தர்பாரில், பெண்களின் நடனத்தில் மூழ்கித் திளைத்திருந்தான் பகீரதன். அதனால் நாரத மகரிஷியின் வருகையைக் கூட கவனிக்காத்திருந்தான். பகீதரனின் மிதமிஞ்சிய போகமும், அதனால் அவன் காட்டிய அலட்சிய மும் நாரதருக்கு கோப மூட்டியது. பெண்களிடம் மோகம் கொண்ட உனக்கு மேக நோய் பீடிக்கட்டும்” என்று பகீ ரதனுக்கு சாபமிட்டார். தவறை உணர்ந்த பகீரதரன், நாரத முனிவரின் பாதம் பற்றி அழுதான். மன்னித்தருளுமாறு கதறினான். உடனே, கருணையால் கனிந்த நாரதர், “பகீரதா…. இதுவும் பரமனின் திருவிளையாடலே. கவலைப்படாதே, பாரத தேசமெங்கும் சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபடு. 1008-வது லிங்கப் பிரதிஷ்டையின்போது சாபம் நீங்கி நலம் பெறுவாய்” என்றார். அதன்படி நாடு முழுவதும் லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட பகீரதன் நிறைவாக 1008-வது லிங்கத்தை எங்கு பிரதிஷ்டை செய்வது என்று கண்மூடி இறைவனை வேண்டினான். அப்போது அவனது மனதில் நெருப்பு மலர்களாய் பூத்துக் குலுங்கும் புரசுவனம் தோன்றியது. அங்கே 1008-வது லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட இறைவனின் ஆணை கிடைத்தது. அதன்படி பாரதத்தின் தென் பகுதியில் உள்ள புரசுக் காட்டை அடைந்தான். வனத்தின் அழகில் மனம் லயித்த பகீரதன் ஒரு பெரிய புரசு மரத்தின் கீழ் லிங்கப் பிரதிஷ்டை செய்தான். அதற்கு அபிஷேகம் செய்ய புனித நீர் வேண்டுமென பிரார்த்தித்தான். அங்கே கங்கை பிரசன்னமானாள். அந்த கங்கா தீர்த்தத்தைக் கொண்டு அபிஷேகம் செய்து, உள்ளமுருக வழிபட்டான். அப்போது ஈசன் தோன்றி பகீரதனின் சாபம் நீக்கி, அவனது நோயை மறையச் செய்தருளினார். பகீரதனின் நோய் தீர்த்த ஈசன், புரசுவனத்திலேயே, “கங்காதரேசுவரர்” என்ற திருநாமத்தோடு கோவில் கொண்டு, இன்றும் தம்மை நாடிவரும் அடியார்களின் துயரங்களை துடைத்து அவர்களின் வாழ்வில் வளம் சேர்த்து...
Read moreCrowded Purasawalkam has an ancient Chola temple for Siva right in its centre, whose tall, five-tiered gopuram is visible from the main road. It is dedicated to Gangadeeswara, the form of Siva who received the River Ganga on her torrential descent from the heavens.
This temple is said to be one of the oldest in Chennai; it is certainly one of the better-known shrines in the city. The mandapa opposite the main sanctum, from where you can also see the shrine for Goddess Pankajambal, is very modern. Apparently it was constructed in 1964 when the temple was renovated. A rare stone image here, not usually seen in temples, is of Bhagiratha, a king who performed penance to Siva for bringing the River Ganga to earth from the heavens. A wonderful sight is the very well-maintained temple tank full of water. The temple itself is clean and...

Read more