அருள்மிகு சவுமிய தாமோதரப்பெருமாள் திருக்கோயில், வில்லிவாக்கம்-600 049. சென்னை.
தல சிறப்பு: இத்தலத்தில் சுவாமியை குழந்தைக்கண்ணனாகவே பாவித்து வழிபடுகிறார்கள். மூலவர், உற்சவர் இருவரின் இடுப்பிலும் கயிறு அழுந்திய தடம் இருக்கிறது.
திருவிழா: வைகாசியில் பிரம்மோற்ஸவம், கோகுலாஷ்டமி, நவராத்திரி, மாசி மகத்தன்று தெப்பத்திருவிழா, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம்.
பொது தகவல்: பெருமாள் நின்ற கோலத்தி்ல் அருளுகிறார்.விமானம் ஆனந்த விமானம் எனப்படுகிறது.3 நிலை ராஜகோபுரத்துடன் கூடிய கோயில் பிரகாரத்தில் ராமர், கண்ணன், ஆண்டாள், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், ராமானுஜர் சன்னதிகள் உள்ளது.
பிரார்த்தனை: சவுமிய தாமோதரரிடம் வேண்டிக்கொள்ள அறிவான குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்: வேண்டுதல் நிறைவேறியவர்கள் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.இவருக்கு வெண்ணெய், பால்பாயசம் படைத்து வழிபட புத்திரபாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை.
தலபெருமை: சித்திரையில் சுவாமி அவதார உற்ஸவம் நடக்கிறது. திருப்பதி தலத்தைப்போலவே இங்கும், சுவாமிக்கு வடக்கு திசையில் (குபேர மூலையில்) அமிர்தபுஷ்கரிணி தீர்த்தம் உள்ளது.ஆடி பவுர்ணமியில் கஜேந்திர மோட்ச விழா நடக்கிறது. அப்போது, சுவாமி கருட வாகனத்தில் தீர்த்தத்திற்கு எழுந்தருளி யானை, முதலைக்கு மோட்சம் கொடுக்கிறார்.மகர சங்கராந் தியன்று (தைப்பொங்கல்) சுவாமி, ஸ்ரீவில்லிப்புத்தூர் ராஜமன்னார் அலங்காரத்தில் ஆண்டாளுடன் புறப்பாடாவது விசேஷம்.
தாயார் அமிர்தவல்லி, தனிச்சன்னதியில் இருக்கிறாள். மகாலட்சுமியின் அம்சமான இவள், பாற்டலில் தோன்றியவள் என்பதால் இப்பெயரில் அழைக்கப் படுகிறாள்.தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தைப் போக்க திருமால், மோகினி அவதாரம் எடுத்தார். இதன் அடிப்படையில் பெருமாள் தலங்களில் திருவிழாவின்போது சுவாமி, மோகினி அலங்காரத்தில் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் தை மாதத்தில் நடக்கும் உற்ஸவத்தின் நான்காம் நாளில் தாயாருக்கு மோகினி அலங்காரம் செய்கின்றனர்.இவ்விழாவின் போது இவள் கோயில் வளாகத்திலுள்ள நந்தவனத்திற்கு எழுந்தருளும் வைபவமும் நடக்கிறது.முதலாழ்வார்களின் ஜென்ம நட்சத்திர விழா 3 நாட்களும், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார்,ராமானுஜர், தேசிகர் ஆகியோரின் திருநட்சத்திர விழா 10 நாட்கள் நடப்பது விசேஷம். .
தல வரலாறு: திருமால் கிருஷ்ணராக அவதாரம் எடுத்தபோது, மிகவும் குறும்புத்தனம் மிக்க குழந்தையாக இருந்தார். அவரை தாயார் யசோதையால் கட்டுப்படுத்த முடியவில்லை. எவ்வளவு முயன்றும் கிருஷ்ணர், தாயாரை எப்படியாவது ஏமாற்றிவிட்டு வெளியில் விளையாடச் சென்றுவிட்டார்.பொறுத்துப்பார்த்த யசோதை, ஒருசமயம் கிருஷ்ணர் வெளியில் செல்லாதபடி அவரது இடுப்பில் கயிறை சுற்றி, ஒரு உரலில் கட்டி வைத்துவிட்டார். ஆனாலும் கிருஷ்ணர் உரலையும் சேர்த்து இழுத்துச்சென்று இரண்டு அசுரர்களுக்கு விமோசனம் கொடுத்தார்.இவ்வாறு யசோதை கட்டிவிட்ட கயிறு அழுத்தியதில் கிருஷ்ணரின் வயிற்றில் தழும்பு உண்டானது. எனவே இவர், "தாமோதரன்' என்ற பெயர் பெற்றார். "தாமம்' என்றால் கயிறு, "உதரம்' என்றால் வயிறு எனப்பொருள்.இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் தாமோதரனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. இவர் புன்னகை ததும்ப, அழகாக காட்சி தருவதால், "சவுமிய தாமோதரர்' என்று...
Read moreOldest but well maintained hindu temple in villivakkam that draws much devotees from in and around. Though the temple is a small area,it has shrines of hanuma garuda andal amrutavalli nammalwar ramanujar shrines. 12 famous proponents of visishtadvaita too have separate shrines not found elsewhere. Customs rituals are scrupulously followed with ardent priests and procession during festivals. With sridevi bhoodevi consorts sri sowmya damodar perumal graces all. Ramp provided at some places.Harikata discourse is rendered during auspicious occasions.lot of shops around temple premises sell pooja materials and other needy merchandise. 2 wheelers say 5 to 6 can be parked. Difficult for cars,it seems. Temple has an adjoining dilapidated tank. Approach roads are too narrow.1 km to railway station 100 mts to bus terminus....
Read more(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்;
பாண்டியர்களால், சுமார் 800-ஆண்டுகளுக்கும் முன் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த சிறப்புமிக்க வைணவத் திருத்தலத்தில், ஆனந்த விமானத்தின் கீழுள்ள கருவறையில் நம் பெருமாள், தேவியர் இருபுறமும் உடனிருக்க, நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறார்.
(பக்தர்கள், காலம்காலமாக இத்திருத்தலத்தின் சுவாமியை குழந்தை கண்ணனாகவே பாவித்து வழிபடுகின்றனர்)
மூலவர், உற்சவர் இருவரின் இடுப்பிலும் கயிறு அழுந்திய தடம் இருக்கிறது.
புராண வரலாற்று நிகழ்வின்படி ஒரு சமயம், தாயார் யசோதை குழந்தை கிருஷ்ணர் வெளியில் செல்லாதபடி அவரது இடுப்பில் கயிறைச்சுற்றி, ஒரு உரலில் கட்டிவைத்துவிட்டார். ஆனாலும் கிருஷ்ணர் உரலையும் சேர்த்து இழுத்துச்சென்று இரண்டு அசுரர்களுக்கு விமோசனம் கொடுத்ததார். இவ்வாறு யசோதை கட்டிவிட்ட கயிறு அழுந்தியதால் கிருஷ்ணரின் வயிற்றில் தழும்பு உண்டானதின் அடிப்படையில் இத்திருத்தலத்தில், மூலவரும், உற்சவரும் இடுப்பில் கயிறு அழுந்திய தடத்துடன் அருட்காட்சி அளிக்கின்றனராம்.
( "தாமம்" என்றால் கயிறு. "உதரம்" என்றால் வயிறு. எனவே, "தாமோதரன்" எனும் திருநாமம் பெற்ற இறைவன், ("சௌம்ய" என்றால் அழகு) இத்திருத்தலத்தில் புன்னகை ததும்ப அழகாக காட்சி தருவதால் "சௌம்ய தாமோதரனாக" அழகுத் திருக்காட்சியளிக்கிறார்)
தனி சன்னதியில், அமிர்தவல்லி தாயார் அமர்ந்த நிலையில் அழகு அருட்காட்சியளிக்கிறாள்.
(தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தினை போக்கிட நம் திருமால், மோகினி அவதாரம் எடுத்தார். இதன் அடிப்படையில் பொதுவாக, பெருமாள் தலங்களில் திருவிழாக்களின்போது இறைவன் மோகினி அவதாரத்தில் காட்சி தருவார். ஆனால், இத்திருக்கோயிலில் தை மாதத்தில் நடக்கும் உற்சவத்தின் நான்காம் நாளில் நம் அமிர்தவல்லி தாயார் மோகினி அவதாரத்தில் திருக்காட்சி தருவது தலச்சிறப்புக்களில் ஒன்றாகும்)
தள்ளிப்போகும் மகப்பேறு விரைவில் நலமாக கிடைக்கப்பெறவும், குழந்தைச் செல்வங்கள் கல்வி கேள்வி ஞானங்களில் சிறந்து விளங்கிடவும் இத்தல இறைவனை உளமார வழிபடுதல் நிச்சயம் நன்மை பயக்கும் என்பது நம்பிக்கை.
நம் பெருமாள் தம்பதியருக்கு உகந்த அத்தனை விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும் இத்திருத்தலத்தில் நடைபெறும் "கிருஷ்ண ஜெயந்தி" விழா வெகு விசேஷமாம்).
🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக:
🇮🇳👍🏻 பாரத நாடு பழம்பெரும் நாடு! நீரதன்...
Read more