Had a wonderful darshan at Tiruvallikeni's historic Sri Theerthapalieswarar and Thiripura Sundari Amman temples. This serene and ancient temple is steeped in legend. According to tradition, Sri Agathiyar worshipped here and performed abhishekam to Lord Siva using seawater from the Vangakadal (Bay of Bengal). This temple is one of the revered Saptha Siva Sthalams in Mylapore and is also celebrated as a Thingal (Moon) Sthalam.
Om namah shivaya 🙏
Had wonderful darshan. Very peaceful, powerful and ancient temple. This temple is part of Sapta Sthana Shiva Sthalangal in Mylapore.
Om Kali Om...
Read moreஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில் (சந்திரன் ஸ்தலம்)
மாசிமாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களிலிருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறுவதால், இந்த ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.
அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில். சப்த சிவாலயங்களில் இந்தக் கோயில் இரண்டாவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். பண்டைக் காலத்தில் இங்கு 64 வகையான தீர்த்தக்குளங்கள் அடுத்தடுத்து இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்தத் தீர்த்தங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவையாகக் கருதப்பட்டு வந்தன. மாசி மாதத்தில் 7 சிவாலயங்களின் உற்சவர்களும் கடலில் தீர்த்தவாரி காண்பதற்கு முன்பாக இந்தக் கோயிலில் இருந்த தீர்த்தக் குளங்களில்தான் தீர்த்தவாரி நடைபெறும். இத்தலம் நீருக்கு அதிபதியான சந்திர ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயில் இறைவனை திங்கள் கிழமைகளில் வணங்கி வரத் தண்ணீர் பஞ்சமே ஏற்படாது.
All the above tamil lines came as a forward in whatsapp.I have modified few lines. I thank the unknown writer.
This temple is one among the Saptha Sivan temple. When your in chennai, you can visit this temple and get blessings of Lord Sivan.
it is very special to visit this temple during Sivan ratri.
ஓம் நமச்சிவாய...
Read moreஅருள்மிகு ஶ்ரீ மஹா திரிபுரசுந்தரி அம்பிகை சமேத ஶ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில், திருவல்லிக்கேணி (மயிலாப்பூர்) பகுதி, சென்னை.
இத்தலத்தில், சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவரான நம் இனிய ஈசனும், அம்பிகையும் சற்றே சிறியவர்களாக திருஅருட்காட்சியளிக்கின்றனர்.
சென்னைப் பெருநகரில் உள்ள பழமையான கோவில்களில், அகத்திய மாமுனிவரின் நோய் தீர்த்த இச்சிவத்தலமும் ஒன்று.
அத்ரி முனிவர் வழிபட்ட சிவனாலயம்.
சென்னையிலுள்ள நவக்கிரக சிவன் தலங்களுள், சந்திர பகவானுக்கு உரிய தலம்.
சென்னையிலுள்ள (*குறிப்பாக மயிலாப்பூரில் உள்ள) 'சப்த சிவஸ்தலங்களில்' இத்தலம் இரண்டாவது ஆலயம்.
மாசி மகப் பெருவிழாவின் தீர்த்த நீராட்டத்தின்போது, வங்க கடலுக்குள் மயிலாப்பூரைச் சுற்றியுள்ள ஏழு சிவாலயங்களிலிருந்து எழுந்தருளும் சுவாமிகளில், முதல் தீர்த்த வைபவம் இத்தலத்தின் இறைவனுக்குதான் நடைபெறுமாம். அதனாலேயே, சுவாமிக்கு 'தீர்த்தபாலீஸ்வரர்' எனும் திருப்பெயர்..
அதிகார நந்தி உள்ள சிறப்புமிக்க சிவாலயம்.
வன்னிமரத்தை தலவிருட்சமாக கொண்டுள்ள சிவன்தலம்.
திங்கள் மற்றும் பவுர்ணமி நாட்களில், இத்தல இறை தம்பதியரை வழிபடுதல் மிகுந்த நன்மை பயக்கும் என்பது நம்பிக்கை.
மாசி மாதம் மஹா சிவராத்திரியன்று மட்டும், சூரியபகவானின் ஒளிக்கதிர்கள் இறைவனின் மீது படர்ந்து வழிபட்டு செல்வது...
Read more