அருள்மிகு கௌதமேஸ்வரா் திருக்கோயில் கும்பகோணம். இத்திருக்கோயில் மகாமகக்குளத்தின் தென்மேற்கில் உள்ளடங்கி உள்ளது.
கிழக்கு நோக்கி அமைந்த இத்திருக்கோயில் 2003 இல் நூதனமாகக் கட்டப்பெற்ற மூன்று நிலை இராஜகோபுரங்களைக் கொண்டது.
இத்திருக்கோயிலின் உள்ளே நுழைந்து திருச்சுற்று வலம் வரும்போது தெற்குச் சுற்றில் கோஷ்டத்தில் தெட்சிணாமூா்த்தியும், வடமேற்கில் விநாயகா், கௌதம முனிவா், வள்ளி தேவயானை சமேத சுப்பிரமணியா், மகாலெட்சுமி, சரஸ்வதி சந்நிதிகள் கிழக்கு நோக்கி விளங்குகின்றன.
மேற்குக் கோஷ்டத்தில் லிங்கோத்பவரும் வடக்குக் கோஷ்டத்தில் துா்க்கையும் எழுந்தருளியுள்ளனா்.
அடுத்து சண்டிகேஸ்வரா் சந்நிதி உள்ளது.
வடக்குப் பிராகாரத்தில் நவக்கிரகஹங்களும் வடகிழக்கில் யாகசாலைகளும் உள்ளன.
திருச்சுற்று வலம் வந்து உள்ளே நுழைந்தால் சுவாமி, அம்பாள் சந்நிதியின் முன் உள்ள மகாமண்டபத்தின் வெளியில் இருபுறத்திலும் விநாயகா், தண்டபாணி சந்நிதிகள் உள்ளன.
மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி நடராஜா் சந்நிதி உள்ளது. அருகே நால்வா் சந்நிதியும் உள்ளது.
நடராஜரை வழிபட்டு உள்ளே சென்றால் கருவறையில் கிழக்கு நோக்கி அழகிய ஔி பொருந்திய பாணத்துடன் அருள்மிகு கௌதமேஸ்வரா் காட்சி தருகிறாா்.
சுவாமி சந்நிதிக்கு வலப்புறம் சோமாஸ்கந்தா் உற்சவமூா்த்திகள் எழுந்தருளியுள்ளனா்.
அம்பாள் அருள்மிகு சௌந்திரநாயகி தெற்குநோக்கி நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாா்.
வரலாறு: அமுத கலசத்தின் மீதிருந்த உபவீதம் (பூணால்) விழுந்த இடத்தில் சிவலிங்கம் தோன்றியது.
அதனால் உபவீதேசா் என்ற திருநாமம் வழங்கலாயிற்று.
கௌதம முனிவருக்கு ஏற்பட்ட சாபம் இத்தலத்துப் பெருமானை வழிபட்டதால் நீங்கியது.
அதன் காரணமாக சுவாமி அருள்மிகு கௌதமேஸ்வரா் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறாா்.
கௌதம முனிவரால் உண்டாக்கப்பட்ட தீா்த்தம் கௌதம தீா்த்தம் என்ற பெயருடன் கோயிலுக்கு வடக்கே இருந்தது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அது தூா்க்கப்பட்டுவிட்டது .
நாள்தோறும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
நவராத்திாி விழா, ஆருத்ரா தாிசனம் ஆகிய திருவிழாக்களும் மாசி மகோத்ஸவமும்...
Read moreThe moolavar presiding deity, is found in his manifestation as Gauthameswarar. His consort, Parvati, is known as Soundara Nayaki. The thread around the kumba fell in this place and the linga was formed. It is said that Gowthama muni to get rid of the sin due to killing of a cow worshipped the deity of the temple.Temple associated with Rishi Gautam. It has Very high positive energy atmosphere and one can feel it. There is Gautam Rishi sannidhi in rear...
Read moreThe moolavar presiding deity, is found in his manifestation as Gauthameswarar. His consort, Parvati, is known as Soundara Nayaki. The thread around the kumba fell in this place and the linga was formed. It is said that Gowthama muni to get rid of the sin due to killing of a cow worshipped the deity...
Read more