நம்பெருமாளின் திருவடிகளை சேவிப்பதற்காக ஸ்ரீரங்கம் நோக்கி வந்துள்ள பக்தர்கள் ஏராளம். அவர்கள் அனைவரையும் முதலில் வரவேற்பது வானுயர, விண்ணுயர எழுந்து கம்பீரமாக காட்சியளிக்கும் 236 அடி உயர ராஜ கோபுரம் தான் என்று சொன்னால் மிகையாகாது. ஆனால் இந்த ராஜ கோபுரத்தை விட வரலாற்று சிறப்புமிக்கது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வெள்ளை கோபுரம். இக்கோவிலை சுற்றி அமைந்துள்ள மொத்த கோபுரங்களின் எண்ணிக்கை 21. அனைத்து கோபுரங்களும் பல வண்ணங்களில் காட்சியளிக்க இந்த கிழக்கு கோபுரம் மட்டும் வெள்ளையாக காட்சியளிக்கிறதே? இது ஏன் என்ற ஒரு வினா இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மனதில் எழுவது இயற்கையே.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெற்கு கோபுரமான ராஜகோபுரம் 1987ம் ஆண்டு அகோபில மடம் ஜீயரால் கட்டிமுடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதுவரை இக்கோவிலின் ராஜகோபுரமாக விளங்கியது வெள்ளை கோபுரம் தான். இந்த கோபுரத்திற்கு பின்னால் ஒரு தியாக வரலாறு உள்ளது. முகலாய மன்னர்களின் ஆட்சி காலத்தில் அந்நிய படையெடுப்புகளால் ஸ்ரீரங்கம் கோவில் பலமுறை சூறையாடப்பட்டு பொன் பொருள் எல்லாம் அன்னையே படையினரால் கொள்ளை அடித்து செல்லப்பட்டு இருக்கிறது என்பது வரலாறு. அந்த வரலாற்றுடன் இணைந்தது தான் இந்த வெள்ளை கோபுரத்தின் வரலாறும் உள்ளது.
அது 15ம் நூற்றாண்டு கால கட்டம். அப்போது மதுரையை ஆண்ட சுல்தான் படைகள் ஸ்ரீரங்கம் கோவிலை கொள்ளையடிப்பதற்காக வந்தன. தேவையான பொன் பொருள் எல்லாம் அகப்பட்ட பின்னரும் அந்தப் படையின் தளபதிக்கு ஸ்ரீரங்கத்தை விட்டு செல்ல மனமில்லை. அதற்கு காரணம் காவிரிக்கரையில் அமைந்துள்ள இயற்கை அழகு அல்ல. அவன் மனதில் இக்கோவிலில் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் இன்னும் ஏராளம் இருக்கும் அவற்றையும் கவர்ந்த பின்னரே இங்கிருந்து செல்ல வேண்டுமென திட்டமிட்டான்.
இதற்காக ஒரு நாள் அல்ல பல நாள் தனது படையுடன் ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டான். ஆனால் அவன் நினைத்த பொக்கிஷம் அவன் கண்களில் எளிதாக சிக்கவில்லை. இந்த நிலையில் அன்னியப் படைகளின் ஆதிக்கத்தால் கோவிலுக்கு வரும் பக்தர்களும், ஸ்ரீரங்கம் வாசிகளும் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்த சிரமத்தை கண்டு மனம் பொறுக்காத வெள்ளையம்மாள் என்ற பெண் வெகுண்டு எழுந்தாள். இந்த வெள்ளையம்மாள் வேறு யாரும் அல்ல அவள் கோவிலில் நடனமாடி திருப்பணி செய்து வந்தாள்.
அரங்கன் மேல் உள்ள அளவற்ற பற்றின் காரணமாக பேராசை கொண்ட தளபதிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என திட்டமிட்டாள் வெள்ளையம்மாள். பெண்ணாசை பிடித்த அந்த தளபதி வெள்ளையம்மாளிடம் நெருங்கி பழகினான். அந்த நெருக்கத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வெள்ளையம்மாள் ஒருநாள் தளபதியிடம் ரகசியமாக பேசினாள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பொக்கிஷம் எங்கே இருக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.
நான் உங்களுக்கு அதை காட்டுகிறேன் பாருங்கள் என்று கையோடு அழைத்து சென்றாள் வெள்ளை கோபுரத்தின் உச்சிக்கு. விலைமதிப்பற்ற பொக்கிஷம் இன்னும் சற்று நேரத்தில் தனக்கு கிடைக்கப்போகிறது என்ற பேராசையில் அவனும் பின் தொடர்ந்து படிகளில் ஏறினான். வெள்ளை கோபுரத்தின் உச்சியை அடைந்ததும் வெள்ளையம்மாள் அந்த தளபதியை மேலிருந்து கீழே தள்ளிவிட்டாள். இதில் மண்டை உடைந்து நொறுங்கி தளபதி ஒழிந்தான்.
ஆனால் அவன் படைகள் நம்மை சும்மா விடமாட்டார்கள் என்று கருதிய வெள்ளையம்மாள் மேலே இருந்து குதித்து தனது உயிரையும் மாய்த்துக்கொண்டாள். இதுதான் வெள்ளை கோபுரத்தின் தியாக வரலாறு. அரங்கனின் பொக்கிஷத்தை காப்பாற்றுவதற்காக தன்னுயிரை ஈந்த அந்த மங்கையின் நினைவாகவே அந்த கோபுரம் இன்றுவரை வெள்ளை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது வெள்ளையம்மாளின் தியாகத்தை...
Read moreதிருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு, குடும்பத்துடன் கிளம்பி வந்துவிட்டார் ஜாகிர் உசேன்.. இதையடுத்து, ஜாகிர் உசேன் செய்த காரியம், ரெங்கநாதர் கோயிலுள்ள அனைவரையுமே திக்குமுக்காட வைத்துவிட்டது. அப்படியென்ன நடந்தது திருச்சியில்? ஆழ்வார்கள் பாடிய 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் தலைசிறந்ததாகவும் கருதப்படுவது ஸ்ரீரங்கம் கோயிலாகும்.. 108 வைணவ தலங்களில் முதன்மையானது திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இந்த கோவில் பூலோக வைகுண்டம் எனும் சிறப்புப் பெயரையும் பெற்றுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் ஸ்ரீரங்கத்திற்கு வந்து செல்கின்றனர். சிறப்புகள்: 21 கோபுரங்களும் 156 ஏக்கர் பரப்பளவும் கொண்டு இந்த பிரம்மாண்ட கோவில் உலகின் 2வது பெரிய கோவில் என்று சொல்லப்படுகிறது. வைணவ கோயில்களிலேயே, வருடத்தில் 322 நாட்களும் திருவிழா நடைபெறும் ஒரே கோவில் இந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தானாம்.. உலகில் பல்வேறு இடங்களில் இருந்து வைகுண்ட ஏகாதசி நாட்களில் மட்டும் தோராயமாக 10 லட்சம் பக்தர்கள் இங்கே தரிசனத்திற்காக வருவதே இந்த கோயிலின் சிறப்பாகும்.
இந்த நிலையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்னையை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் ஜாகீர்உசேன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பிறகு ரெங்கநாத கோவிலின் உற்சவர் நம்பெருமாளுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடத்தை பரதநாட்டிய கலைஞரான இஸ்லாமிய பக்தர் ஜாகிர் உசேன் என்பவர் வழங்கியிருக்கிறார் சால்வைகள்: கோவில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோரிடம் இந்த கிரீடத்தை ஜாகிர் உசேன் வழங்கினார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து ஜாகிர் உசேன் சொல்லும்போது, "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மேல் உள்ள பக்தியால் இந்த வைர கிரீடத்தை காணிக்கையாக தந்துள்ளேன்.. ஏறத்தாழ அரை அடி உயரம் கொண்ட இந்த கிரீடமானது 3,160 கேரட் மாணிக்கக்கல், 600 வைரக்கற்கள், தங்கம் மற்றும் மரகதக்கல்லை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணிக்கக்கற்கள்: ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஒற்றை மாணிக்கக்கல் கொண்டு வரப்பட்டு குடைந்து எடுக்கப்பட்டு, 400 கிராம் தங்கத்தில் வைரம், மரகத கற்கள் பதிக்கப்பட்டு செய்யப்பட்டது. இதனை டிசைன் செய்வதற்கு சுமார் 8 வருடங்கள் ஆனது. உலகில் முதன்முறையாக மாணிக்க கற்களால் செய்யப்பட்ட வைரக்கிரீடம் என்பது இதன் தனி சிறப்பாகும்.. பிறப்பால் நான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ரெங்கநாதர் மேல் உள்ள பற்றால் இதனை செய்துள்ளேன்" என்று சிலாகித்து சொல்கிறார்...
Read moreThis is the east entrance to temple preferred by locals providing easy access to all the key sannidhis with minimum walking compared to the south entrance (Raja gopuram) and vadakku vasal ( thayar sannidhi). Also more options for car parking and nearest to all leading guest houses . There is an interesting history of the sacrifice of dasi Velliamma in entycing the invading Muslim general Mallik to top of the tower, pushing him to death and following him herself. In her memory this tower is always...
Read more